தமிழகம்: கொசுக்களை ஒழிக்க 3200 ஊழியர்கள்
சென்னை:
தமிழகத்தில் கொசுக்களை ஒழிக்க கூடுதலாக 3,200 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் கூட்டம்டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழகத்தின்சார்பில் சுகாதாரத் துறைச் செயலாளர் சுப்புராஜ் கலந்து கொண்டார்.நிகழ்ச்சிக்குப் பின்னர் சுப்புராஜ் தெரிவிக்கையில், தமிழகத்தில் கொசு ஒழிப்புப் பணிக்காக ஏற்கனவே 650பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது கூடுதலாக 3,200 ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
திருவண்ணாமலை, நீலகிரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் சிக்குன்குனியா பாதிப்புஉள்ளது. மலைப் பகுதி என்பதால் நீலகிரி மாவட்டத்திலும், தண்ணீரைத் தேக்கி வைக்காத பகுதியாக இருப்பதால்திருவண்ணாமலையிலும் கொசு உற்பத்தி இல்லை.
நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக பாதிப்பு உள்ளது. அங்கு விசைத் தறிகள், சாயப் பட்டறைகள் போன்றவைகாரணமாக அதிக தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால், கொசு உற்பத்தி அதிகம் உள்ளது. இதனால் சிக்குன்குனியாபாதிப்பும் அதிகம் உள்ளது.
தமிழகத்தில் 62,500 பேர் சிக்குன்குன்யாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் எண்ணிக்கை இப்போது 25சதவீதமாக குறைந்துள்ளது.
சிக்குன்குனியா மற்றும் டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ. 2 கோடி நிதியுதவிஅளித்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு ரூ. 15 கோடியை செலவிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றார்சுப்புராஜ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications