செலவுக்குக் கூட காசு தராத அதிமுக: திருமா.
வடலூர்:
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்கு செலவுக்குக் கூட அதிக பணம் தரவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள்கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் உள்ளாட்சித் தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதையாரும் எதிர்பார்க்கவில்லை. பொதுமக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தார்களா என்பது தெரியாது. ஆனால்எங்களது தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.எதற்காக இந்த முடிவை எடுத்தோம்? சுய நலத்தின் அடிப்படையில் இதை எடுக்கவில்லை. தொலைநோக்கோடுஇந்த முடிவை நாங்கள் எடுத்தோம்.
எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்து கொடுக்க முடியும். ஏனென்றால் நிமிர முடியும் என்பதால் பொறுத்துக்கொண்டோம். ஆனால் எல்லை கடந்தபோதுதான் நாங்கள் பொங்கி எழுந்தோம்.
அதிமுக எங்களது உழைப்பை மட்டுமே எதிர்பார்த்தது. எங்களை அங்கீகரிக்க நினைக்கவில்லை. வெற்றிவாய்ப்பு இல்லாத தொகுதிகளைத்தான் சட்டசபைத் தேர்தலில் கொடுத்தனர்.
எங்களுக்கு பெட்டி பெட்டியாக கொடுத்ததாக பலர் குற்றம் சாட்டினர். ஆனால் பிரசார செலவுக்குக் கூட அவர்கள்பணம் தரவில்லை என்பதுதான் உண்மை.
சரி உள்ளாட்சித் தேர்தலிலாவது செல்வாக்கு உள்ள இடமாக கொடுங்கள் என்றோம். அதையும் தரவில்லை.அலட்சியப் படுத்தினார்கள். அரவணைத்துச் செல்லத் தவறினர்.
சந்திக்க முடியாத, மதிக்கத் தெரியாத தலைவியிடமிருந்து விலகி மரியாதை உள்ள அணியில் சேர்ந்திருக்கிறோம்.இப்போது இனம் இனத்தோடு இணைந்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலிலேயே இணைந்திருந்தால் 100 சதவீதவெற்றி கிடைத்திருக்கும் என்றார் திருமாவளவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications