சொத்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. மனு
டெல்லி:
பெங்களூரில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை முடக்கும்வகையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனுவைத்தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாஉச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும்லண்டன் ஹோட்டல் வழக்கு ஆகியவை விசாரிக்கப்பட்டு வருகிறது. இருவழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க பெங்களூர் நீதிமன்றம் முடிவு செய்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தார். அதில், இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க எடுக்கப்பட்டமுடிவு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு புறம்பானது.
சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை பெரும்பகுதி முடிந்து விட்டது. அதனுடன்லண்டன் ஹோட்டல் வழக்கையும் சேர்த்து விசாரிக்க ஜெயலலிதா கோருவதுவிசாரணையை இழுத்தடிக்கும் செயலாகும். எனவே பெங்களூர் நீதிமன்ற உத்தரவுக்குதடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும்,பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில் ஜெயலலிதா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் அன்பழகன் இந்த மனுவைத் தாக்கல்செய்துள்ளார். இரு வழக்குகளும் ஒரே விஷயம் சம்பந்தப்பட்டது என்பதால்தான் இருவழக்குகளையும் சேர்த்து விசாரிக்க பெங்களூர் நீதிமன்றம் முடிவு செய்தது.
ஆனால் விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதை சீர்குலைக்கும் வகையில் மனுதாக்கல் செய்யப்படுகிறது. இதை உச்சநீதிமன்றம் ஏற்கக் கூடாது.
பெங்களூர் நீதிமன்றத்தின் உத்தரவு சட்டப்படி நியாயமானது. அதில் தலையிடக்கூடாது. சென்னை தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையிலிருந்துதொடருமாரு பெங்களூர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுஉத்தரவிட்டுள்ளது.
எனவே அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்குடன் எனக்கு எதிராக மனு தாக்கல்செய்துள்ள அன்பழகனின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஜெயலலிதாகோரியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications