வன்முறை: ஜெ. தீட்டிய சதி-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் அராஜகம் செய்ததாக கூறி எனது பெயருக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சர்மு.க.ஸ்டாலின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த முயலுகிறார் ஜெயலலிதா. அவர் போட்ட சதித் திட்டம்தான்சென்னை நகரில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் என முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய அதிமுக ஆட்சியில் பழனிச்சாமி என்பவர்தேர்தல் ஆணையராக பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவருக்குப் பதவி நீட்டிப்பு தந்து தனது விருப்பம்போல ஜனநாயகத்தை அவர் சீரழிக்க அனுமதிக்கப்பட்டார்.

2001ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்லில் சென்னை மாநகரில் அதிமுகவினர் நடத்தியதுபோல, தனது கட்சியினரைக்கொண்டு அராஜகம் செய்யத் திட்டமிட்டிருந்தார். இதற்கு வழியில்லாமல் தடுக்கப்பட்டு விட்டது. இதனால்முதல்வர் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் மீது அவர் வீண் பழி சுமத்தியுள்ளார்.

கடந்த 8ம் தேதி ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தனது அரசியல் எதிரிகளை இறுதி எல்லை வரைசித்திரவதை செய்து துரத்திய கொடுங்கோலர்களின் கதி என்ன ஆனது என்பதை மறந்து கருணாநிதி, தனது சித்துவிளையாட்டுக்களின் உச்சக்கட்டத்துக்கு வந்து விட்டார்.

இந்தக் கொடூர விளையாட்டின் இறுதி அத்தியாயம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. கருணாநிதியின் கடைசிநேர அராஜகங்களை தேய்த்து துவம்சம் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நரகாசுர வதம் நிச்சயம்நடக்கத்தான் போகிறது. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதாவும் அவரது கூட்டணிக் கட்சி நண்பர்கள் ஓரிருவரும் நடத்திய சதி ஆலோசனையின் வெளிப்பாடேஅவரது குற்றச்சாட்டு ஆகும். தனது தலைமையின் எண்ணத்தையும், குறிக்கோளையும் அதனை விரைவில் செய்துமுடிக்க வேண்டும் என்ற வேகத்தையும் புரிந்து கொண்ட அந்தக் கட்சியின் முன்னோடி நிர்வாகிகள், முதலில் ஒருமாதிரித் திட்டமாக சென்னை மாநகராட்சித் தேர்தலில் அவர்கள் நடத்தியுள்ள அராஜகங்களாகும்.

என்னதான் அவர்கள் வெறியாட்டங்கள் போட்டாலும் திமுகவினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து இந்தஅரசுக்குத் துணை நிற்க வேண்டும் என கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+