தீவிரவாதிகள்: பாக்.குக்கு அமெரிக்கா கண்டிப்பு
வாஷிங்டன்:
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை பாகிஸ்தான் அரசுகட்டுப்படுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டுக்கு அமெரிக்கா திடீர் என அறிவுரைவழங்கியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ஒருஅறிக்கையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதம் ஊடுறுவுவதை பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது.இந்தியாவுக்குள் ஊடுறுவும் தீவிரவாதிகளை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்தவேண்டும். அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். தீவிரவாத செயல்களை பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது, ஆதரவு தரக் கூடாது.
இந்தியாவில் தீவிரவாத செயல்கள் நடைபெற பாகிஸ்தான் ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும் என்றுகூறியிருந்தார்.
அமெரிக்காவின் இந்த திடீர் கண்டிப்பு பாகிஸ்தான் தரப்பில் பெரும் அதிர்ச்சியையும், இந்திய தரப்பில் பெரும்ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.அமைப்புக்கு உள்ள தொடர்பு சமீபத்தில் வெளியானது.
இதுதொடர்பான முக்கிய ஆதாரங்களை அமெரிக்காவிடம் இந்தியா அளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவேஅமெரிக்கா இந்த கண்டிப்பை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்க அரசு தங்களிடம் தனிப்பட்டமுறையில் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லம் கூறுகையில், இந்தியாவில்தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும் என அமெரிக்க அரசிடமிருந்துஎந்த கோரிக்கையும் பாகிஸ்தானுக்கு வரவில்லை.
அமெரிக்க அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் கூறியுள்ளபடி எந்தவிதமான கோரிக்கையையும் அமெரிக்கா இதுவரைஎங்களுக்கு விடுக்கவில்லை என்றார்.
இதற்கிடையே அமெரிக்காவின் கண்டிப்பை இந்தியா வரவேற்றுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்திற்குஎதிரான இந்தியாவின் பிரசாரத்திற்குக் கிடைத்தள்ள மிகப் பெரிய வெற்றி இது என இந்தியா வர்ணித்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் வெளியுறவு செயலாளர் சல்மான் ஹைதர் கூறுகையில், இது மிக முக்கியமான அறிக்கை.தெற்காசியாவில் நிலவும் உண்மை நிலையை அமெரிக்க அரசு இப்போதுதான் முழுமையாக புரிந்து கொள்ளத்தொடங்கியுள்ளதை உணர்த்துகிறது.
பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தில் பங்கு உள்ளது என்பதை அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. காஷ்மீரில் நடக்கும்தீவிரவாதச் செயல்கள் அனைத்தும் பாகிஸ்தானில் உருப் பெற்றவை என்பதை அமெரிக்கா முதல் முறையாகபகிரங்கமாக ஒப்புக் கொள்வதாக அமைந்துள்ளது இந்த அறிக்கை.
பாகிஸ்தான் மீது அமெரிக்கா நேரடியாக குற்றம் சாட்டாவிட்டாலும் கூட பாகிஸ்தானிலிருந்துதான் தீவிரவாதிகள்இந்தியாவுக்குள் ஊடுறுவுகின்றனர், அதைத் தடுக்க வேண்டிய கடமை பாகிஸ்தானுக்கு உள்ளது என்பதைவலுவான தொணியில் சுட்டிக் காட்டியுள்ளது என்றார் ஹைதர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications