மறு வாக்குப் பதிவு: அதிமுக, சிபிஎம் புறக்கணிப்பு
சென்னை:
சென்னை மாநகராட்சியில் இன்று நடைபெறும் மறு வாக்குப் பதிவை அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியகட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும்வெள்ளிக்கிழமை நடந்த முதல் கட்டத் தேர்தல் நடந்த, சென்னையில் 17 வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 60வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை இந்த தேர்தலை ரத்து செய்து விட்டு வேறொரு தேதியில்,ராணுவத்தின் உதவியுடன் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் கோரிக்கை.
எனவே சென்னையில் நடைபெறும் மறு வாக்குப் பதிவில் அதிமுக கலந்து கொள்ளாது, புறக்கணிக்கும்.தமிழகத்தின் இதர பகுதிகளில் நடைபெறும் மறு வாக்குப் பதிவில் அதிமுக கலந்து கொள்ளும் என்றுகூறியுள்ளார்.
மார்க்சிஸ்டுகளும் புறக்கணிப்பு:
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சென்னை மாநகராட்சியின் 17 பூத்துகளில் நடைபெறும் மறுவாக்குப் பதிவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தென் சென்னை மாவட்ட சிபிஎம் செயலாளர் டி.கே.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முதல் கட்ட வாக்குப் பதிவின்போது வாக்குச் சாவடிகளை முழுமையாக கைப்பற்றி தேர்தலை முடித்து விட்டனர்திமுகவினர்.
ஆனால் தேர்தல் அமைதியாகவும், எந்தவித வன்முறையும் இன்றி நடந்து முடிந்ததாக காவல்துறை ஆணையரும்,டிஜிபியும், தேர்தல் ஆணையரும் கூறியுள்ளது மிகவும் அருவெறுப்பாக உள்ளது.
இப்போது 17 வாக்குச் சாவடிகளுக்கு மட்டும் மறு வாக்குப் பதிவு என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவேஇதனைப் புறக்கணிக்கவும், வாக்கு எண்ணிக்கையையும் புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றுகூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications