வீடு மோசடி: மேலும் 3 பாதிரியார்கள் கைது
சென்னை:
வீடு கட்டித் தருவதாக கூறி காண்டிராக்டர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக மேலும் 3 பாதிரியார்களைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த காண்டிராக்டர் சுப்ரமணியம் என்பவர் மத்திய குற்றப் பிரிவு போலீஸில்கடந்த மாதம் 26ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில், இலவச வீடுகள் கட்டித் தரும் காண்டிராக்டை எனக்குதருவதாகவும், அதற்குரிய வைப்பு நிதியாக ரூ.2 லட்சம் தர வேண்டும் என்றும் கூறி தன்னை சிலர்அணுகியதாகவும், பணம் கொடுத்த பின்னர் அவர்கள் காண்டிராக்ட் தராமல் ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார்.இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், தற்போது3 பாதிரியார்கள் சிக்கியுள்ளனர். அதுகுறித்த விவரம்:
அல்லேலுயா பூரண சுவசேஷக மிஷனரீஸ் ஆப் இந்தியா என்ற பெயரில் ஒரு கிறிஸ்தவ சபை உள்ளது. இந்தஅமைப்பின் கீழ் சுமார் 500 சிறு தேவ சபைகள் உள்ளன. சோழிங்கநல்லூரைச் சேர்ந்த சத்தியசீலன் என்பவர்தான்இதன் பிஷப்பாக உள்ளார்.
இவருடன் ஐசக் சாவேல், ஜே.டி.சாலமன், ஜோசப் சாலமன் ஆகியோர் பாதிரியார்களாக செயல்பட்டு வந்தனர்.இந்த சபையின் சார்பில் கடந்த ஆண்டு மே மாதம் நலிவடைந்த பிரிவினருக்கான வளர்ச்சி சேவை அறக்கட்டளைஎன்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் தலைவராக சத்தியசீலனும், செயலாளராக ஜோசப் சாலமனும்செயல்பட்டனர். அறக்கட்டளை உறுப்பினர்களாக ஜே.டி.சாலமன் ஐசக் சாவேல் ஆகியோர் செயல்பட்டனர்.
இந்த அமைப்பு பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது. அதில், அறக்கட்டளை சார்பில் இலவச வீடுகள் கட்டித் தரஇருப்பதாகவும், இதற்கான காண்டிராக்டுகளைப் பெற காண்டிராக்டர்கள் அணுகலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.மொத்தம் 6 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காண்டிராக்டர்கள் இவர்களை அணுகியுள்ளனர். அப்போது 100வீடுகள் கட்டித் தரும் காண்டிராக்ட் வேண்டுமானால் ரூ. 2 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் எனஅறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதை ஏற்ற 350க்கும் மேற்பட்ட காண்டிராக்டர்கள் பணத்தை கொடுத்துள்ளனர். அப்படிக் கொடுத்தவர்தான்மேலே சொன்ன சுப்ரமணியம். அதன் பிறகு பணம் கொடுத்த காண்டிராக்டர்களுக்கு காண்டிராக்ட்கொடுக்கப்படவில்லை. அவர்கள் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதுகுறித்து நிறைய புகார்கள் வந்ததைத் தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி ஜே.டி.சாலமன், ஜோசப்சாலமன், ஐசக் சாவேல் ஆகியோரை கைது செய்தனர். பிஷப் சத்தியசீலன் தலைமறைவாகி விட்டார்.
கைதானவர்களிடமிருந்து 2 ஆடம்பர கார்கள், ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவைகைப்பற்றப்பட்டன. இவர்களின் மோசடியல் பல அரசியல் பிரமுகர்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆனந்தராஜ், யோபு சரவணன் என இரு பிஷப்புகள் இதேபோல செய்த மோசடியால் பல நூறு பேர்தலையில் துண்டைப் போட்ட வண்ணம் உள்ளனர். இந்த நிலையிலும் மேலும் ஒரு மோசடி நடந்து 3பாதிரியார்கள் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications