தலித் பஞ்சாயத்து தலைவர் குடும்பத்தோடு மாயம்!
மதுரை:
கீரிப்பட்டி பஞ்சாயத்து தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பால்ச்சாமி தனது குடும்பத்தோடுகிராமத்தை விட்டு தலைமறைவாகி விட்டார். குறிப்பிட்ட ஜாதியினரின் மிரட்டலைத் தொடர்ந்து அவர்தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவி தலித் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்இதை ஏற்க மறுத்த குறிப்பிட்ட ஒரு ஜாதியினர் பஞ்சாயத்துத் தலைவராக தலித் வருவதை விரும்பாமல் கடந்த பலஆண்டுகளாக தேர்தலே நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர்.இதனால் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவி பல காலமாகவே காலியாக இருந்து வருகிறது. இந்த நிலையில்சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் கீரிப்பட்டி பஞ்சாயத்துக்கு ஊர் மக்கள் சார்பில் பால்ச்சாமி என்பவர்நிறுத்தப்பட்டார்.
அவரை எதிர்த்து வேறு யாரும் நிற்காததால், பால்ச்சாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பால்ச்சாமிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
தற்போது பால்ச்சாமியை காணவில்லை. தலித் காலனியில் உள்ள அவரது வீடும் பூட்டப்பட்டுக் கிடக்கிறது.குடும்பத்தோடு அவர் கிராமத்தை விட்டு சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
கீரிப்பட்டி பஞ்சாயத்துக்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் அடுத்த நிமிடமே ராஜினாமா செய்து விடுவதுவழக்கமாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையிலிருந்து தப்பிக்கவே தனது குடும்பத்தினருடன் பால்ச்சாமிதலைமறைவாகியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
கீரிப்பட்டியில் தலித் சமூகத்தினருக்கு இப்படிப்பட்ட சிக்கல் இருப்பது புதிதல்ல. பூங்கொடியான் என்பவர் 5ஆண்டுகளுக்கு முன்பு கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பதவியேற்ற அடுத்தநிமிடமே அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
அத்தோடு அவர் ஊரை விட்டும் சென்று விட்டார். இன்று வரை அவர் ஊர் திரும்ப வில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பூங்கொடியானின் தாயார் வீரம்மாள் கூறுகையில், எனது மகன் பூங்கொடியான் 5ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு போனவன்தான். இதுவரை அவனால் ஊருக்கு திரும்ப முடியவில்லை.திரும்பி வந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் இந்த நிலை என்கிறார்.
இதைக் கருத்தில் கொண்டுதான் பால்ச்சாமி ஊரை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
கீரிப்பட்டியைப் போலவே நாட்டாமங்கலம், பாப்பாபட்டி, கொட்டக்காச்சியேந்தல் ஆகிய தலித்பஞ்சாயத்துக்களும் தலைவர் இல்லாமல் உள்ளன. கொட்டக்காச்சியேந்தலிலும் ஊர் மக்களால் நிறுத்தப்பட்டவேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரும் பதவியேற்றவுடன் ராஜினாமா செய்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டாமங்கலத்தில் 5 பேர் போட்டியிடுகின்றனர். பாப்பாபட்டியில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications