அப்சலுக்கு தூக்கு கயிறு ரெடி!
லக்னோ:
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகம்மது அப்சல் குருவைதூக்கிலிடுவதற்குத் தேவையான கயிறு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தூக்குத் தண்டனையிலிருந்து அப்சலைக் காப்பாற்றக் கோரி குடியரசுத் தலைவர் அப்துல் கலாக்கு அப்சலின்மனைவி கருணை மனு சமர்ப்பித்துள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் கலாம் எந்த முடிவையும்எடுக்கவில்லை.இந்த நிலையில், அப்சலைத் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்துமேற்கொண்டுள்ளது. முதலில் தூக்கில் போடுவதற்கான நபரை தேர்வு செய்தது. தற்போது தூக்குக் கயிறுதயார்படுத்தப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பக்ஸார் நகரில் உள்ள சிறையிலிருந்து இந்த கயிறு வரவழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பக்ஸார்சிறை கண்காணிப்பாளர் அன்சாரி கூறுகையில், திகார் சிறைக்கு 3.75 கிலோ எடை கொண்ட, மெழுகுப் பூச்சுடன்கூடிய கயிறு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கயிறு 60 அடி நீளம் கொண்டது. ஒரு கிலோவுக்கு ரூ. 180 என்ற கணக்கில், வாட் வரி, விற்பனை வரிஉள்ளிட்டவை சேர்த்து மொத்தம் ரூ. 1,820 கொடுத்து டெல்லியிலிருந்து வந்த குழுவினர் கயிற்றை வாங்கிச்சென்றுள்ளனர். மணிலா கயிறு என்று இதற்குப் பெயர்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்த சிறையில் கயிறுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும்கயிறுகள் மிகவும் உறுதியானவை. மிகவும் புகழ் பெற்றவை. பல மாநிலங்களில் தூக்குத் தண்டனை கைதிகளைதூக்கில் போட இங்கிருந்துதான் கயிறுகளைப் பெறுகிறார்கள்.
தூக்குக் கயிறுகளைத் தயாரிப்பதற்காக இங்கு தனி இயந்திரம் உள்ளது. சிறைக் கைதிகளே இக்கயிறுகளைதயாரிக்கிறார்கள். தூக்குக் கயிறு தவிர கைதிகளின் கைகளைக் கட்ட உதவும் கயிறுகள், கூடாரம் அமைப்பதற்கானகயிறு உள்ளிட்ட பல வகையான கயிறுகளும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
தூக்கில் தொங்க விடப்படும் கைதிக்கு எந்தவிதமான அசவுகரியம் ஏற்படாத வகையில் எங்களது சிறைக்கயிறுகள், மிகவும் கவனம் எடுத்துச் செய்யப்படுபவை என்றார் அன்சாரி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications