உள்ளாட்சித் தேர்தலில் 71% வாக்குகள் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2கட்டமாக நடந்த வாக்குப் பதிவில் மொத்தம் 71 சதவீத வாக்குகள்பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரசேகரன், ஒரு சில அசம்பாவிதங்களைத் தவிரபொதுவாக அமைதியான வாக்குப் பதிவு நடந்தது. முதல் கட்ட வாக்குப் பதிவில் 72 சதவீத வாக்குகள்பதிவாகின. 2வது கட்டத் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின. இரு கட்டங்களையும் சேர்த்து சராசரியாக71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2001ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்த வாக்குப் பதிவு 63 சதவீதம்தான். ஆனால் இப்போது அதைவிட அதிகம் பதிவாகியுள்ளது.2வது கட்டத் தேர்தலில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதாக சொல்ல முடியாது.

27 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2001ல் நடந்த உள்ளாட்சித்தேர்தலின்போது மொத்தம் 525 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் இத்தேர்தலில் 91வாக்குச் சாவடிகளில் தான் மறு தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை 30 மாவட்டங்களிலும் ஓரிரு அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன.தவிர்க்க முடியாத சம்பவங்கள் இவை.ஓட்டு எண்ணிக்கை 18ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும். 19ம் தேதி பிற்பகலுக்குள் அனைத்துமுடிவுகளும் வெளியாகி விடும் என எதிர்பார்க்கிறோம்.

வெற்றி பெறுபவர்களுக்கு 25ம் தேதி அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.28ம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி துணைத்தலைவர்கள் மறைமுகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றார் சந்திரசேகரன்.

அதற்கு மேல் செய்தியாளர்கள் கேள்வி கேட்கத் தொடங்கியபோது அவற்றுக்குப் பதிலளிக்காமல் சட்டென்றுகிளம்பிச் சென்று விட்டார் சந்திரசேகரன். இதனால் செய்தியாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

மறு வாக்குப் பதிவில் 42% பதிவு:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 17 வாக்குச் சாவடிகளில் நடந்த மறு வாக்குப் பதிவில் 42.65 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை முதல் மாலை வரை படு மந்தமாக மறு வாக்குப் பதிவு நடந்தது. பொதுமக்கள் வாக்களிக்க பெரியஅளவில் ஆர்வம் காட்டவில்லை. சரமாரியாக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாக பொதுமக்களும்,எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்றைய தேர்தலில் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்ட 27 வாக்குச் சாவடிகளிலும் இன்று காலை 7மணிக்கு மறு வாக்குப் பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+