அதிமுக எம்.எல்.ஏ. நள்ளிரவில் கைது!
சென்னை:
அதிமுக எம்.எல்.ஏ. சேகர்பாபுவை நள்ளிரவில் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது.இதையொட்டி போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கிண்டி கத்திப்பாரா சந்திப்பில்போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனைநடத்தியபோது அதில் 5 பெட்ரோல் குண்டுகளும், ஏராளமான ஆயுதங்களும் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வேனில் இருந்த 16 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்,வட சென்னையைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் அனுப்பித்தான் தாங்கள் பழவந்தாங்கல் பகுதியில்கலவரம் செய்ய வந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்.எல்.ஏ.வை போலீஸார் கைதுசெய்ய முடிவு செய்தனர். முதல் கட்ட வாக்குப் பதிவின்போது போலீஸாருடன் நடந்த மோதலில் காயமடைந்துசிகிச்சை பெற்று வந்த சேகர்பாபுவை நேற்று நிள்ளிரவு போலீஸார் கைது செய்தனர்.
அவரை இரவோடு இரவாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 27ம் தேதி வரை சிறைக் காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும் நெஞ்சு வலி என்று கூறி சேகர்பாபு ஏற்கனவே மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்ததால் அவரை மீண்டும் மருத்துவமனைக்கே போலீஸார் கொண்டு சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications