சென்னை தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சென்னை மாநகராட்சிக்கு திடந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 13ம் தேதி சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தது. அப்போது பெருமளவில்வன்முறை மூண்டது. திமுகவினர்தான் வன்முறை அராஜகத்தில் ஈடுபட்டுமுறைகேடுகளை செய்துள்ளதாக கூறி அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளது.

இதேபோல மதிமுக, பாஜக, தேமுதிக, சிபிஎம் ஆகிய கட்சிகளின் சார்பிலும் வழக்குதொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் சென்னை 67வது வார்டில்சுயேச்சையாகப் போட்டியிட்ட ஏ.எம்.மோகன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பெரும் வன்முறை மட்டுமல்லாதுபெரிய அளவில் முறைகேடுகளும் நடந்துள்ளதால் சென்னை மாநகராட்சித் தேர்தலைரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கை முக்கியத்துவம் கருதி உடனடியாக விசாரிக்கவேண்டும் என்று கோரியிருந்தார் மோகன்.

இந்த மனு தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்குவந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது. எப்போதுவிசாரணைக்கு பட்டியலிடப்படுகிறதோ அப்போதுதான் எடுத்துக் கொள்ள முடியும்என்று கோரி மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+