கருணாநிதியுடன் சி.பி.எம். தலைவர்கள் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் முதல்வர் கருணாநிதியை சந்தித்துபல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

சென்னை மாநகராட்சிக்கு நடந்த கவுன்சிலர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதனித்து 8 வார்டுகளில் போட்டியிட்டது. இதேபோல மாநிலத்தின் பல இடங்களிலும்மார்க்சிஸ்ட் கட்சியினர் தனித்துப் போட்டியிட்டனர். இதனால் கூட்டணியில் விரிசல்என்பது போல பேச்சுக்கள் எழுந்தன.

மேலும், சென்னை மாநகராட்சி தேர்தலின்போது பெருமளவில் வன்முறை ஏற்பட்டது.மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்ட எட்டு வார்டுகளிலும் மோதல் வெடித்தது.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தேவி தாக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதுவழக்குகளும் போடப்பட்டன.

இதனால் மார்க்சிஸ்ட் கட்சி கடும் அதிருப்தி அடைந்தது. இது தேர்தலே கிடையாதுமோசடித் தேர்தல் என்று கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் அறிக்கை விட்டார்.மேலும் திமுக அராஜகமாக நடக்கிறது என்றும் கூறியிருந்தார். இதனால் திமுககூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன்தலைமையில் கட்சி நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ளஅவரது வீட்டிற்கு சென்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை குறித்தும்,கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கப்பட்டது குறித்தும், வழக்குகள் போடப்பட்டிருப்பதுகுறித்தும் கருணாநிதியிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார் கூறியதாக தெரிகிறது. இருகட்சிகளிடையேயும் இடப் பங்கீடு தொடர்பாக நிலவிய கருத்து மோதல்கள் குறித்தும்விவாதிக்கப்பட்டது.

சந்திப்புக்குப் பின்னர் வரதராஜனை செய்தியாளர்கள் முற்றுகையிட்டபோது, எங்களதுகருத்துக்களை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம் என்று மட்டும் தெரிவித்தார். பின்னர்முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

மாநகராட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போட்டியிட்ட 8 வார்டுகளிலும் சிலவன்முறைச் சம்பவங்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு நடத்தப்பட்டதையும்,அதனால் திமுக, மார்க்சிஸ்ட் கட்சி செயல் வீரர்களுக்கு இடையே நல்லுறவிலும்,நட்புணர்விலும் கீறல் விழுந்திடும் நிலைமை உருவாகி அது மேலும் வளர்ந்துவிரிவடைந்து விடாத தடுத்திடவும், கூட்டணி நெறிமுறைக்கு ஊனம் ஏற்படாமல்பாதுகாக்கவும், திமுக சார்பிலும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பிலும் சந்தித்துப் பேசினோம்.

திமுக சார்பில் நான், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் வீராசாமி,துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வரதராஜன்,டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து பேசி இனி நடப்பவைநல்லவையாக இருக்க நம் உறவையும், ஒற்றுமையையும் வலுப்படுத்துவோம் எனஉறுதி எடுத்துக் கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+