மதுரை வெற்றி: திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்
சென்னை:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் திமுக பெற்ற அமோக வெற்றியைத்தொடர்ந்து, சென்னை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாககொண்டாடினர்.
மதுரை இடைத் தேர்தல் முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியதிலிருந்தேசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் திரளாக கூடத் தொடங்கினர்.ஆரம்பத்திலிருந்தே கெளஸ் பாட்ஷா முன்னணியில் இருப்பதாக தெரிய வந்ததைத்தொடர்ந்து திமுகவினர் உற்சாகம் பன்மடங்காகியது.இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்டதும் திமுகதொண்டர்கள் உற்சாகத்தின் உச்சத்திற்கே சென்றனர். அறிவாலய வளாகத்தில்சரமாரியாக பட்டாசுகளை கொளுத்தி கொண்டாடினர்.
இதேபோல மதுரையிலும் கொண்டாட்டம் கரைபுரண்டோடியது. வேட்பாளர் கெளஸ்பாட்ாஷாவை தூக்கி வைத்து திமுகவினர் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி மூக்கையாவிடமிருந்து பெற்றுக்கொண்ட பாட்ஷா, நேராக நெல்பேட்டைக்குச் சென்றார். அங்குள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார்.
அதன் பின்னர் தேர்தல் பிரசாரத்தை தலைமை தாங்கி நடத்திய முதல்வர்கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியிடம் ஆசி பெற்றார். மதுரை நகர் முழுவதும்திமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில்ஈடுபட்டனர்.
இதேபோல மாநிலத்தின் பிற பகுதிகளிலும் திமுகவினர் உற்சாகமாக மதுரைவெற்றியை கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications