உள்ளாட்சி: நாளை வாக்கு எண்ணிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8மணிக்குத் தொடங்குகிறது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் பதிவானவாக்குகள் தமிழகம் முழுவதும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக தமிழகம்முழுவதும் 866 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நான்கு அடுக்கு பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் ஏஜென்டுகளுக்குபல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செல்போன் கொண்டு வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வாக்குகளை எப்படி எண்ணுவது என்பது குறித்து இன்று வாக்கு எண்ணும் பணியில்ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு பயிற்சி தரப்பட்டது. நிறம் வாரியாக வாக்குச்சீட்டுக்கள் பிரிக்கப்பட்டு, தனித் தனி அறைகளில் வாக்குகள் எண்ணப்படும்.

வாக்குச் சீட்டு அடிப்படையில் தேர்தல் நடந்துள்ளதால் தேர்தல் முடிவுகள் நாளைபிற்பகலுக்கு மேல் தான் தெரிய வரும்.

சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளிலும் பதிவான வாக்குகள் 11 மையங்களில்எண்ணப்படவுள்ளன. இங்கு வரலாறு காணாத பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2001ம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கையின்போதும்பெரும் வன்முறை வெடித்தது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+