இலங்கை துப்பாக்கிச் சூடு: தமிழக மீனவர் காயம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம் அருகே இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டதில் மீனவர் ஒருவர்படுகாயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுஅங்கு வந்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர்.இதனால் பயந்து போன மீனவர்கள் அங்கிருந்து தப்பி ஜெகதாப்பட்டனம் வந்து சேர்ந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் செளந்தரராஜன் என்ற மீனவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். அவரை ஜெகதாப்பட்டனத்தில்உள்ள மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாகஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியச் செயல் புதுக்கோட்டைமாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications