தேர்தல் ஆணையர் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு
சென்னை:
சென்னை மாநகராட்சி தேர்தலை எதிர்த்து அதிமுக தொடர்ந்துள்ள வழக்கில் மாநிலதேர்தல் ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகிவிளக்கம் தருமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்யக் கோரியும், நாளைநடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரியும் அதிமுக சார்பில் அக்கட்சிஎம்.எல்.ஏ. ஜெயக்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதே கோரிக்கையை வலியுறுத்தி மதிமுக, தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆகிய கட்சிகளும் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டன.
இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் கோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லாஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமைவழக்கறிஞர் விடுதலையிடம், இந்த வழக்கு தொடர்பாக சில கேள்விகளை கேட்கவிரும்புவதாகவும், அதற்கு பதில் அளிக்கத் தயாரா என்று நீதிபதிகள் கேட்டனர்.
அதற்கு விடுதலை, இதுகுறித்த உண்மை நிலை தனக்குத் தெரியாது என்றார்.இதையடுத்து மாநில தேர்தல் ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர்இன்று பிற்பகல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications