முன்ஜாமீன் கோரி வளர்மதி மனு
சென்னை:
சென்னை பழவந்தாங்கலில் பெட்ரோல் குண்டுகளை வீசி கலவரத்தை ஏற்படுத்த முயன்ற வழக்கில் தேடப்பட்டுவரும் முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த 15ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தல் 2ம் கட்ட வாக்குப் பதிவின்போதுகிண்டி கத்திப்பாரா சந்திப்பில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, ஒரு வேனில் 16 பேர் 5 பெட்ரோல் குண்டுகளுடன் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 16பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பழவந்தாங்கல் நகராட்சித்தேர்தலில் வன்முறையை ஏற்படுத்த தாங்கள் போய்க் கொண்டிருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் வளர்மதிகேட்டுக் கொண்டதால், அதிமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு தங்களை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து சேகர்பாபுவை நள்ளிரவில் கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். வளர்மதிமீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து வளர்மதி தலைமறைவாகி விட்டார். அவரைப்போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் வளர்மதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி இன்று மனு தாக்கல்செய்யப்பட்டது. நாளை அல்லது நாளை மறுதினம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications