பாப்வா நியூ கினியாவில் கடும் நிலநடுக்கம்!
சிங்கப்பூர்:
பாப்வா நியூ கினியாவில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இருப்பினும் சுனாமி பேரலைகள் ஏற்படும் வாய்ப்பில்லை எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பாப்வா நியூ கினியா தீவில் இன்று காலை 9.25மணிக்கு கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர்அளவுகோலில் இது 6.5 ரிக்டராக பதிவாகியுள்ளது.மோர்ஸ்பி துறைமுகத்திலிருந்து 577 கிலேர்மீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின்மையம் இருந்தது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்றாலும் கூட சுனாமி அலைகள்ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வுத் துறைதெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவலும் இதுவரைவெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதி, அடிக்கடி நிலநடுக்கங்கள்மற்றும் எரிமலை வெடிப்புகளை சந்திக்கக் கூடிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்:
இதற்கிடையே, அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிற்பகல் 1.29 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5 ரிக்டராக பதிவாகியுள்ளது. அந்தமான் தீவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இதன் மையம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications