5 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது திமுக
சென்னை:தமிழகத்தில் சென்னை நீங்கலாக, மற்ற 5 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணிக் கட்சிவேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர். இதனால் இந்த 5 மாநகராட்சிகளையும்திமுக கூட்டணி கைப்பற்றுகிறது.
அதே போல 102 நகராட்சிகளில் கிட்டத்தட்ட 80 நகராட்சிகளில் திமுக கூட்டணிமுன்னணியில் உள்ளது. 600 மூன்றாம் நிலை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும்திமுக கூட்டணியினரே பெருவாரியாக முன்னிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் 6 மாநகராட்சிகள், 102 நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சிஅமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல்எண்ணப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் நிலவரப்படி மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய ஐந்துமாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே முன்னணியில் இருந்துவருகின்றனர்.
மதுரை, திருச்சி மாநகராட்சிகளை திமுக கூட்டணி தக்க வைக்கிறது. கோவை மற்றும்நெல்லை மாநகராட்சிகளை அதிமுகவிடமிருந்து திமுக கூட்டணி பறிக்கிறது.
சேலம் மாநகராட்சியில் திமுகவுக்கு தேமுதிக கடும் போட்டியைக் கொடுத்தாலும்திமுக கூட்டணியே வெல்லும் நிலையில் உள்ளது.
102 நகராட்சிகளில் கிட்டத்தட்ட 80 நகராட்சிகளில் திமுக கூட்டணியினர்முன்னணியில் உள்ளனர். 10 நகராட்சிகளில் மட்டுமே அதிமுகவுக்கு முன்னிலைகிடைத்துள்ளது. சில நகராட்சிகளில் தேமுதிக முன்னணியில் உள்ளது.
மேலும் 10 இடங்களில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே இழுபறி நிலவுகிறது.
600 மூன்றாம் நிலை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணியினரேபெருவாரியாக முன்னிலையில் உள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவும் ஓரளவுக்கு நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோல ஏராளமான சுயேச்சைகளும் வென்றுள்ளனர்.
கிராம பஞ்சாயத்துகள், ஊராட்சிகளில் வென்றவர்கள் விவரம் நாளை காலை தான்முழுமையாக தெரிய வரும்.
தமிழகத்தில் 2 கட்டமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. 1 லட்சத்து 31 ஆயிரம்இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 18,000 பேர் போட்டியின்றிதேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 1,20 லட்சம் பதவிகளுக்கு தேர்தல்நடத்தப்பட்டது.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.மொத்தம் 700 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. வாக்கு எண்ணும்மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளிலும் இன்று தொடங்கவிருந்த வாக்குஎண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்அறிவுறுத்தியதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications