தேர்தல் வன்முறை: நீதி விசாரணைக்கு உத்தரவு
சென்னை:மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமியின் ஆதரவாளர்களால் திருவொற்றியூர்தொகுதிக்குட்பட்ட கே.வி.கே.குப்பம் கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள்குறித்து நீதி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவொற்றியூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட மீனவர் கிராமம் கே.வி.கே.குப்பம்.கடந்த சட்டசபைத் தேர்தலில் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுகவுக்குவாக்களித்ததாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த அமைச்சர் சாமியின் சகோதரர்கள் மற்றும் ஆதரவாளர்கள்தேர்தல் முடிவுக்குப் பின்னர் குப்பத்தில் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டதாகசர்ச்சை எழுந்துள்ளது. மேலும் அமைச்சரின் சகோதரர்களின் மிரட்டலால் 200குடும்பத்தினர் குப்பத்தை காலி செய்து விட்டு காசிமேடு, ராயபுரம் ஆகிய பகுதிகளில்உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த வன்முறை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் கே.வி.கே.குப்பத்தைச் சேர்ந்தவர்கள்சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று ஒரு உத்தரவைப்பிறப்பித்தது.
அதன்படி, கே.வி.கே. குப்பத்தில் நடந்த வன்முறை, 200 குடும்பங்கள்மிரட்டப்பட்டது ஆகியவை தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்புப் பிரிவு பதிவாளர் ஆர்.மாலா விசாரணைநடத்துவார்.
திருவொற்றியூர் முன்சீப் நீதிமன்ற வளாகத்தில் விசாரணை நடைபெறும்.
ஒரு மாதத்திற்குள் இந்த கமிஷன் தனது விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில்சமர்ப்பிக்க வேண்டும். கமிஷனுக்கும், கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம்,வாக்குமூலம் அளிக்கவுள்ளவர்களுக்கும் காவல்துறை தக்க பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், அதுகுறித்த ஆவணங்களைவைத்திருப்பவர்கள் எந்தவித பயம் இன்றி கமிஷன் முன்பு ஆஜராகி தங்களிடம்உள்ள ஆதாரங்களையும், ஆவணங்களையும் கமிஷன் முன்பு கொடுக்கலாம் என்றுநீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரின் தொகுதியில் நடந்த தேர்தல் வன்முறை தொடர்பாக விசாரிக்கவிசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications