இலங்கை: கடற்படை தளம் மீது புலிகள் தாக்குதல்
கொழும்பு:
இலங்கையின் கல்லே நகரில் உள்ள கடற்படை தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில்16 பேர் பலியாயினர்.
நேற்று முன் தினம் திரிகோணமலை அருகே கடற்படை வீரர்களுடன் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீதுபுலிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 103 வீரர்கள் பலியாயினர். இந்த சம்பவம் இலங்கைஅரசுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரான கல்லேவில் உள்ள கடற்படை தளம்மீது புலிகள் இன்று காலை கடும் தாக்குதலை மேற்கொண்டனர். இதில் 16 பேர் பலியாயினர்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான கெகேலியா ரம்புகவெல்லாகூறுகையில், கல்லே துறைமுகம் அருகே உள்ள கடற்படை தளம் மீது புலிகள் இன்று காலை தாக்குதல் நடத்தினர்.கடற்படை தளம் அருகே கடலுக்குள் 2 குண்டுகளை வெடித்து புலிகள் தாக்குதலை தொடங்கினர்.
தற்போது அங்கு புலிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.
புலிகளின் தாக்குதல் மேலும் பரவி விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினருக்கு வெற்றிகிடைத்துள்ளது. வர்த்தக ரீதியிலான துறைமுகப் பகுதியில் இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. தெற்குப்பகுதியில் உள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையிலேயே புலிகளின் தாக்குதல் அமைந்துள்ளதுஎன்றார் ரம்புகவெல்லா.
தமிழர் கடைகள் சூறை:
இந் நிலையில் கால்லே நகரில் தமிழர்களின் கடைகளை சிங்கள வெறியர்கள் சூறையாடினர். இதையடுத்துபோலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இப்போது அங்கு ஊரடங்குஅமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் தமிழர்கள், முஸ்லீம்களின் வாகனங்களும் தாக்கப்பட்டு வருகின்றன.
உயிர் தப்பிய 216 குழந்தைகள்:
இதற்கிடையில் இலங்கையின் கிழக்கில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் விமானப் படை நடத்திய கடும் தாக்குதலில் அனாதை இல்லம் தாக்குதலுக்குஆளானது. அதில் இருந்த 216 குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புதுக்குடியிருப்பில் காந்தரூபன் அறிவுச் சோலை குழந்தைகள் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட அனாதைக் குழந்தைகள் தங்கியுள்ளனர். அனைவரும்பெற்றோரை இழந்தவர்கள்.
விடுதலைப் புலிகள்தான் இந்த இல்லத்தைப் பராமரித்து வருகிறார்கள். இங்கு விமானப் படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. இதில்குளியலறை, சமையல் அறை உள்ளிட்டவை சேதமடைந்தன. இதில் 2 குழந்தைகள் இறந்தனர்.
216 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் இலங்கை நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
அமெரிக்கா கண்டனம்:
இதற்கிடையே, கடற்படை வீரர்கள் மீது நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கவெளியுறவு செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கோமர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறையை கைவிடுவதன் மூலம் மட்டுமே அமைதிப்பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்த முடியும்.
இரு தரப்பினும் பிரச்சினைக்குத் தீர்வு காண தீவிரமாக முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் ரீதியிலான தீர்வுக்கான முயற்சிகள் பலன்அளிக்கும் என்று கூறியுள்ளார் மெக்கோமர்க்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications