அப்சல் தூக்குத் தண்டனை தள்ளி வைப்பு
டெல்லி:குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ள கருணை மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால்,நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகம்மது அப்சல் குரு நாளை தூக்கிலிடப்பட மாட்டார் எனத் தெரிகிறது.
கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் கைது செய்யப்பட்டஅப்சலுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்சலுக்குதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
பலரை தூக்கிலிட்ட அனுபவம் கொண்ட மம் என்பவர் அப்சலையும் தூக்கிலிடுவதற்கு புக் செய்துவைக்கப்பட்டார். தூக்குக் கயிறும் வாங்கப்பட்டது. இந்த நிலையில் அப்சலின் மனைவி குடியரசுத் தலைவரிடம்வழங்கியுள்ள கருணை மனு மீது இதுவரை எந்த முடிவும் அறிவிக்கப்படாததால் திட்டமிட்டபடி அப்சலைத்தூக்கிலிட இயலாத நிலை ஏற்பட்டது.
சட்டப்படி குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் கருணை மனு உள்ளபோது, யாரையும் தூக்கிலிட முடியாது.எனவே திட்டமிட்டபடி நாளை அப்சல் தூக்கிலிடப் படமாட்டார் எனத் தெரிகிறது. தூக்குத் தண்டனை தள்ளிவைக்கப்படும் எனத் தெரிகிறது.
அப்சலுக்கு கருணை காட்ட வேண்டும் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத், முன்னாள் முதல்வர்பரூக் அப்துல்லா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் இதற்குகடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications