பாப்பாபட்டி-தலித் பஞ்சாயத்து தலைவர் தேர்வு
மதுரை:நீண்ட நெடுங்காலமாக தலைவர் பதவிக்கு ஆளே இல்லாமல் இருந்து வந்தபாப்பாபட்டி, நாட்டாமங்கலம் ஆகிய தலித் கிராம பஞ்சாயத்துக்களுக்கு புதியதலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, நாட்டாமங்கலம், கீரிப்பட்டி மற்றும் விருதுநகர்மாவட்டம் கொட்டக்காச்சியேந்தல் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்குத் தலைவர்பதவியில் யாரும் அமர முடியாத நிலை நிலவியது.
குறிப்பிட்ட ஒரு ஆதிக்க ஜாதியினரின் எதிர்ப்பு காரணமாக இங்கு எந்தத் தலித்வேட்பாளரும் போட்டியிட முன் வரவில்லை. அப்படியே மீறிப் போட்டியிட்டாலும்,வெற்றி பெற்றவுடன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குதள்ளப்பட்டனர்.
இந் நிலையில் சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தபோதுபாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகிய பஞ்சாயத்துத் தலைவர்பதவிகளுக்கும் தேர்தல் நடந்தது.
இதில் கீரிப்பட்டி பஞ்சாயத்துக்கு ஊர் மக்களால் நிறுத்தப்பட்ட பால்ச்சாமிபோட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தற்போது குடும்பத்துடன் அவர்கிராமத்தை விட்டு தலைமறைவாகி விட்டார்.
குறிப்பிட்ட ஜாதியினரின் மிரட்டலுக்குப் பயந்தே அவர் ஊரை விட்டு ஓடி விட்டதாககூறப்படுகிறது.
மற்ற இரு பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில்பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் கிராம மக்கள் சார்பில் நிறுத்தப்பட்டபெரியகருப்பன் என்பவர் வெற்றி பெற்றார்.
இவருக்கு 505 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட பால்சாமி என்பவருக்கு 291வாக்குகளும் கிடைத்தன.
வெற்றி பெற்ற பெரியகருப்பன் கூறுகையில், எனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி.ஊர் மக்களுக்கு சேவை செய்வேன். 5 வருட காலம் பதவியில் இருந்து மக்களுக்குசேவை செய்வேன் என்றார்.
நாட்டாமங்கலம் தலைவர் பதவிக்கு மொத்தம் 5 பேர் போட்டியிட்டனர். இதில் ஊர்மக்களால் நிறுத்தப்பட்ட கணேசன் 359 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கொட்டக்காச்சியேந்தல் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு யாரும்போட்டியிடாததால் அங்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications