சென்னையில் மைண்ட் ட்ரீ நிறுவன கிளை
சென்னை:பெங்களூரைச் சேர்ந்த மைண்ட் ட்ரீ கன்சல்டிங் நிறுவனம், தனது சாப்ட்வேர் கிளையை சென்னையில்தொடங்கியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஒலிம்பியா தொழில்நுட்ப பூங்காவில் இக்கிளை தொடங்கப்பட்டுள்ளது. மத்தியதகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில்,
இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக தொழில் நுட்பத்துறை மாறி வருகிறது. தகவல்தொழில் நுட்பத்துறையின் மூலம் தினம் 400 பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இந்தியாவிலேயேதமிழகத்தில் தான் சிறப்பான தகவல் தொழில் நுட்பக் கொள்கை அமலில் இருக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மைண்ட் ட்ரீ நிறுவனத் தலைவர் அசோக் சூட்டா, தலைமை செயலாளர் சுப்ரதோபாக்சி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 30 ஆயிரம் சதுர அடிபரப்பில் துவக்கப்பட்டுள்ளஅலுவலகத்தில் தற்போது 480 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதல் கட்ட பணிகள் முடிவடைந்த பிறகு 2800பேருக்கு வேலை கிடைக்கும் என்றனர்.
கோவையில் பாஸ் நிறுவனம்:
இதற்கிடையே, ஜெர்மனியைச் சேர்ந்த ராபர்ட் பாஸ் நிறுவனம், கோவையில் தனது உற்பத்தி மையத்தைதொடங்கியுள்ளது. இந் நிறுவனத்தை திறந்து வைத்து அமைச்சர் தயாநிதி மாறன் பேசுகையில்,
இந்தியாவில் தற்போது, மென்பொருள் உற்பத்தியின் மதிப்பு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.இது இந்தியாவின் ஏற்றுமதியில் 20 சதவீதம் ஆகும். 2008ம் ஆண்டிற்குள் மென்பொருள் மற்றும் சேவை துறைமூலம் 57 முதல் 65 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்வதே இலக்கு.
இந்தியாவில் பிபிஓ துறையும் மிகவேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் ஏற்றுமதி வருவாய் கடந்தாண்டு6.3 பில்லியனாக உயர்ந்துள்ளது. உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் 17 கோடி டெலிபோன்இணைப்புகள்உள்ளது.
தற்போது ராபர்ட் பாஸ் நிறுவனம் 2008ம் ஆண்டுக்குள் 18 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.கோவையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. கோவையை தகவல்தொழில்நுட்ப நகராக மாற்றும் திட்டம் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னையைப் போலவே கோவை, மதுரைஉள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை நிறுவும் திட்டம் ஏற்கனவேஅமல்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 18 மாதங்களில் கோவையில் டி.சி.எஸ்., விப்ரோ நிறுவனங்கள் தங்களது பணிகளைத் தொடங்கவுள்ளனஎன்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications