நான் அதிமுகவில் எப்போ சேர்ந்தேன்?-ராதிகா
சென்னை:நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லாதபோது, என்னை அதிமுகவிலிருந்து நீக்கியதாக அறிவிப்புவெளியாகியுள்ளது வியப்பாக உள்ளது என்று நடிகை ராதிகா கூறியுள்ளார்.
சரத்குமார் கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைவதற்காக ராதிகாவுடன் ஆண்டிப்பட்டிக்குச் சென்றார்.
அங்கு ஜெயலலிதாவை சந்தித்த அதிமுகவில் சரத்குமார் இணைந்தபோது அவருக்கு அதிமுக உறுப்பினர்அட்டையை வழங்கினார் ஜெயலலிதா. கூடவே ராதிகாவுக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது(திணிக்கப்பட்டது).
ஆனால் அதன் பின்னர் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராதிகா கலந்து கொள்ளவில்லை. சரத்குமார் மட்டுமே தீவிரப்பிரசாரத்தில் ஈடுபட்டார். அதிமுகவில் ராதிகா சேர்ந்த பிறகும் கூட அவரது ராடான் நிறுவன தயாரிப்புகள்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தன.
அந்த நிகழ்ச்சிகளை ஜெயா டிவிக்கு மாற்றுமாறு ராதிகாவுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.ஆனால் அதை ஏற்க ராதிகா மறுத்து விட்டார். பிசினஸ் வேறு, அரசியல் வேறு என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிமுக தரப்பு கடுப்பானது.
இந்த நிலையில்தான் ராதிகாவை அதிமுகவை விட்டு நீக்கி நேற்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.இதுகுறித்து ராதிகா கருத்து தெரிவிக்கையில்,
இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. காரணம் நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லை. அப்படிஇருக்கும்போது என்னை எப்படி நீக்கி உத்தரவிட முடியும்?
எனது கணவர் சரத்குமார் அதிமுகவில் சேர விரும்பி அங்கு சென்றபோது நானும் அவருடன் சென்றேன்.அவ்வளவுதான். அவர் அழைத்தார் என்பதற்காக சிங்கப்பூரிலிருந்து கிளம்பி மதுரை வந்தேன்.
ஜெயலலிதாவை எனது கணவர் சந்தித்தபோது, என்னிடம் உறுப்பினர் அட்டையைக் கொடுத்தார்கள். ஆனால்அது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருப்பினும் அப்போது ஜெயலலிாத முதல்வராக இருந்தபடியால்,மரியாதை கருதி அந்த அட்டையை வாங்கிக் கொண்டேன்.
பின்னர் எனது கணவருடன் நான் வெளியே வந்தபோது, அவரிடம், இது எனக்குப் பிடிக்கவில்லை, அரசியலில்எனக்கு சுத்தமாக ஆர்வம் இல்லை என்றேன். அவரோ, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இது நடந்ததால்ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார். இதுதான் அன்று நடந்தது.
எனக்கு இப்போது அரசியலில் ஆர்வம் கிடையாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் டிவி தயாரிப்பு பணி மட்டுமே.நான் ஒரு கிரியேட்டர். அவ்வளவுதான். எனக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது என்றார் ராதிகா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications