மறு வாக்குப் பதிவு-ஆர்வம் காட்டாத மக்கள்
சென்னை:
சென்னை மாநகராட்சியின் 12 வார்டுகளுக்குட்பட்ட 27 வாக்குச் சாவடிகளில் இன்றுநடந்த மறு வாக்குப் பதிவு அமைதியாகவும், மிக மந்தமாகவும் நடந்து முடிந்தது.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து தேர்தலை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ.ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வாக்கு எண்ணிக்கையையும் நிறுத்தி வைக்கஅவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 27 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்தவும், மற்றவார்டுகளில் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் அதிர்ச்சி அடைந்த அதிமுக நேற்று காலை உச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால், மாலையேஅங்கும் அதிமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
மேலும், இன்று மறுவாக்குப் பதிவு நடப்பதால் வாக்கு எண்ணிக்கையை காலை 8 மணிக்குப் பதிலாக பிற்பகல் 2மணி முதல் வாக்கு எண்ணிக்கையை தொடங்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11, 12, 13, 15, 28, 59, 64, 69, 97,137, 147, 151 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 27 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7மணிக்கு மறு வாக்குப் பதிவு தொடங்கியது.
பலத்த பாதுகாப்பு போடப்பட்டள்ளதால், வாக்குப் பதிவு அமைதியாக நடந்துவருகிறது. தேர்தலை அதிமுக, மதிமுக ஆகிய கட்சிகள் புறக்கணித்துவிட்டன.
அமைதியாக வாக்குப்பதிவு நடந்தாலும் வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.இதனால் மிகமிக மந்தமாக வாக்குப் பதிவு நடந்து முடிந்தது.
மறு வாக்குப் பதிவு இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து அந்தவாக்குகளை எண்ணும் பணியும் உடனடியாகத் தொடங்கியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications