சென்னை மாநகராட்சி: திமுக கூட்டணி முன்னிலை
சென்னை:
சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த வாக்குப் பதிவில் திமுக கூட்டணியே பெரும்பாலானஇடங்களில் முன்னிலையில் உள்ளது.
சென்னை மாநகராட்சியின் 143 வார்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது.
வாக்குப் பதிவின்போது வன்முறை நடந்ததால் ஒட்டு மொத்த தேர்தலையும் ரத்து செய்யக் கோரி அதிமுக சார்பில்உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த உயர் நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்து, 12 வார்டுகளுக்கு உட்பட்ட 27 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தவும் மற்ற 143 வார்டுகளிலும் பதிவான வாக்குகளை இன்று எண்ணவும்உத்தரவிட்டது.
ஆனால், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அதிமுக அணுகியது. அங்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியேஎன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதிமுகவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில், மறுவாக்குப்பதிவு நடப்பதால் வாக்கு எண்ணிக்கையை பிற்பகலுக்கு மேல் ஆரம்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று பகல் 2 மணிக்கு 11 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரிக் கல்லூரி உள்ளிட்ட 11 மையங்களில் வாக்கு எண்ணும் பணிநடந்தது.
வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள்நள்ளிரவுக்கு மேல் தான் வெளியாகவுள்ளன.
இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட இடங்களில் 10 இடங்களில் திமுக கூட்டணி வென்றுள்ளது. ஓரிடத்தில்அதிமுக முன்னிலையில் உள்ளது.
வாக்குகள் எண்ணப்படும் பெரும்பாலான வார்டுகளில் திமுக கூட்டணியே முன்னிலையில் உள்ளது. இதனால்சென்னை மாநகராட்சியையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் நிலை உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications