கவுன்சிலர்களின் அரசியல் லாங் ஜம்ப் ஆரம்பம்
மதுரை:திமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக அதிருப்தி வேட்பாளர்தேர்தலில் வென்ற அடுத்த நாளே மீண்டும் திமுகவில் சேர்ந்துவிட்டார்.
இதேபோல திருமங்கலம் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் அமலி கிரேஸ் வெற்றி பெற்றஇரண்டே நாட்களில் திமுகவில் இணைந்து அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் 25வது வார்டில் திமுக சார்பில் இரண்டு முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்சின்னம்ாள். மேயராகக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டவர். இந்த முறையும் இவருக்கே சீட்தரப்பட்டது.
இதனால் சீட்டை எதிர்பார்த்து காத்திருந்த மேற்குப் பகுதி இளைஞரணி துணைச் செயலாளர் அருண்குமார்அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சுயேச்சையாக மனு தாக்கல் செய்து போட்டியிட்டார்.
அதிகாரப்பூர்வ திமுக வேட்பாளரை எதிர்த்து தீவீரமாக பிரசாரம் செய்தார் அருண்குமார். அவருக்கு ஆதரவாகதிமுகவைச் சேர்ந்த பலரும் பிரசாரம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது, அருண்குமார் அபார வெற்றி பெற்றார். அவருக்கு 2,769வாக்குகளும், திமுக வேட்பாளர் சின்னம்மாளுக்கு 1,374 வாக்குகளும் கிடைத்தன.
வெற்றி பெற்றதும் அதற்கான சான்றிதழைப் பெற்ற அருண்குமார் நேராக அழகிரியின் வீட்டுக்குப் போய் அவரைசந்தித்து மீண்டும் திமுகவில் இணைந்தார். அழகிரியின் காலிலும் விழுந்து வணங்கினார். அப்போது கூடியிருந்ததிமுகவினர், அண்ணன் மன்னிச்சுட்டாரு என்று ஆரவாரமாக கை தட்டி கோஷமிட்டனர். (இது எப்டி இருக்கு??)
திமுகவிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்டதால்தான் அருண்குமாருக்கு வெற்றி கிடைத்ததாககூறப்படுகிறது. ஆனால் அவரோ ஓட்டுப் போட்டவர்களையும், வெற்றியையும் தூரப் போட்டு விட்டு அப்படியேஅலேக் ஆக மீண்டும் திமுகவுக்கு ஓடி விட்டதால் 25வது வார்டில் சலசலப்பு நிலவுகிறது.
அருண்குமாரைப் போல மேலும் சில மதுரை சுயேச்சைகளும் அரசியல் ஜம்ப் செய்ய தயாராகி வருவதாகக்கூறப்படுகிறது.
இதேபோல திருமங்கலம் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் அமலி கிரேஸ் என்பவரும்வெற்றி பெற்ற இரண்டே நாட்களில் திமுகவில் இணைந்து அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
திருமங்கலம் நகராட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதில் திமுகவும், அதிமுகவும் கடுமையாக மோதி வருகின்றன.இதற்காக இரு கட்சியினருமே தேமுதிக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை குறி வைத்து ரகசிய பேரத்தில்ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திருமங்கலம் 4வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்அமலி கிரேஸ், தடாலடியாக திமுகவில் இணைந்துள்ளார். அழகிரியை சந்தித்த அவர் திமுகவில் இணைவதாகஅறிவித்தார்.
அமலி கிரேஸ் கடந்த நகராட்சியிலும் இதே வார்டில் அதிமுகவில்தான் இருந்தார். வட்ட பிரதிநிதியாகவும்செயல்பட்டு வந்தார். ஆனால் தற்போது தடாலடியாக தாவி விட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவரது கணவர் சிவனாண்டி வார்டு அதிமுக செயலாளராக இருந்தவர். அவரும் இப்போது திமுகவில்ஐக்கியமாகி விட்டார். இவர்களுக்கு கட்சி தாவுவது புதிதில்லையாம். ஏற்கனவே காங்கிரஸில் இருந்த அவர்கள்பின்னர் அதிமுகவுக்குத் திரும்பினர். இப்போது திமுகவுக்குப் போயுள்ளனர்.
இந்தத் திடீர் தாவலால் திருமங்கலம் நகராட்சியில் திமுக கூட்டணியின் பலம் 12 ஆக உயர்ந்துள்ளது. தலைவர்பதவியைப் பிடிக்க இன்னும் 2 தலைகள் மட்டுமே தேவையாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications