பெரியாறு அணை: 23ல் அனைத்துக் கட்சி கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து விவாதிக்க வருகிற 23ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குதமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 152 அடியாக அதிகரிக்க தமிழக அரசு கோரிவருகிறது. ஆனால் அதற்கு சம்மதிக்க கேரள அரசு மறுத்து வருகிறது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் 142 அடியாக அணையின் உயரத்தை அதிகரிக்க உத்தரவிட்டும் கூட அதைக்கண்டுகொள்ளாத கேரள அரசு, அவசரச் சட்டம் ஒன்றை இயற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பை முடக்கி விட்டது.

தற்போது பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என கேரள அரசு கூறி வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெயாறு அணை விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துஅனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்டியுள்ளார்.

வருகிற 23ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில்அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கோரி அனைத்துக் கட்சித் தலைவர்களும் தல்வர் கருணாநிதி தனித்தனியாக அழைப்பு அனுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+