நக்ஸல் ரகு சரணடையவில்லை: ஆந்திர டிஜிபி
ஹைதராபாத்:சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு ராக்கெட் லாஞ்சர்கள் கடத்தப்பட்ட வழக்கில்தேடப்பட்டு வந்த ரகு என்கிற டெக் மது சரணடையவில்லை என ஆந்திர மாநிலடிஜிபி ஸ்வரன்ஜித் சென் கூறியுள்ளதால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம்ஏற்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து ராக்கெட் லாஞ்சர்களை தயாரித்து ஆந்திராவில் உள்ளநக்சலைட்டுகளுக்கு அனுப்பியதாக ரகு மற்றும் சுதாராணி ஆகியோரை போலீஸார்தேடி வந்தனர்.
சமீபத்தில் இருவரும் ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் மாவட்ட எஸ்.பி. செளம்யான்னிலையில் சரணடைந்ததாக செய்திகள் வெளியாகின. அவர்களிடம் போலீஸார்வாக்குமூலம் பெற்றதாகவும், தீவிர விசாரணை நடந்து வருவதாகவும்தெரிவிக்கப்பட்டது.
ஆனால் டெக் மதுவும், சுதாராணியும் சரணடையவில்லை என தற்போது ஆந்திரமாநில டிஜிபி ஸ்வரண்ஜித் சென் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
போலீஸாரால் தேடப்பட்டு வரும் டெக் மது என்கிற சீனிவாச ரெட்டியும், அவரதுதோழியும் போலீஸில் சரணடைந்ததாக எனக்குத் தகவல் இல்லை. இன்னும் இருவரும்தலைமறைவாகத்தான் இருக்கிறார்கள் என்றார் சென்.
இதனால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரகு, சுதாராணி சரண்அடைந்ததாக வந்த தகவலை முதலில் வெளியிட்டவர் ஆந்திர மாநல உள்துறைஅமைச்சர் ஜனா ரெட்டிதான்.
இந் நிலையில் டிஜிபி முரண்பாடாக தகவல் வெளியிட்டுள்ளது பெரும் குழப்பத்தைஏற்படுத்தியுள்ளது. சரண அடைந்ததாக கூறப்பட்டவர்கள் யார் என்ற கேள்வியும்எழுந்துள்ளது.
சரணடைந்துவிட்டதாகக் கூறப்பட்ட சுதாராணி நக்ஸல் இயக்கத்தில் பெண்கள்பாலியல்ரீதியில் பாழ்படுத்தப்பட்டு வருவதாக வாக்குமூலம் தந்ததாக தகவல்கள்வந்தன. இது ஆந்திர போலீசார் விட்ட டுபாக்கூர் என்று தெரிய வந்துள்ளது.ஷ்ர
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications