திருச்சி-ரெளடி முட்டை ரவி என்கவுண்டரில் சாவு
திருச்சி:நெடுங்காலமாக திருச்சியைக் கலக்கி வந்த பிரபல ரெளடி முட்டை ரவிபோலீஸாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
திருச்சியைச் சேர்ந்த முட்டை ரவி அப்பகுதியை பல காலமாக கலக்கி வந்த பயங்கரரெளடி ஆவான். இவன் மீது ஏராளமான கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டம் பகுதியில், கூலிப் படைத் தலைவன்ஒருவனையும், அவனது கூட்டாளிகள் 2 பேரையும் பட்டப் பகலில் போட்டுத்தள்ளியவன் முட்டை ரவி.
சமீபத்தில் முட்டை ரவியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்குவிசாரணை ஒன்றுக்காக நேற்று முட்டை ரவியை போலீஸார் மத்திய சிறையிலிருந்துஅழைத்து வந்தனர். அப்போது அவன் போலீஸ் பிடியிலிருந்து தப்பினான்.
இதையடுத்து ரவியைப் பிடிக்க 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல்வேட்டை நடந்தது. அப்போது நாவல்பட்டு பகுதியில் ரவி மறைந்திருப்பதாக தகவல்கிடைத்தது.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸ் படை அங்குவிரைந்தது. ரவியைப் பார்த்த போலீஸ் படை அவனை வளைத்துப் பிடித்தது. இதனால்அதிர்ந்து போன ரவி தனது முதுகில் மறைத்து வைத்திருந்த பெரிய வீச்சரிவாளைஎடுத்து போலீஸ்காரர்களை வெட்ட முயன்றான்.
அப்போது சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் சண்முகவேல் என்ற போலீஸ்காரர்ஆகியோருக்கு இடது கைகளில் வெட்டு விழுந்தது.
இதையடுத்து எஸ்.ஐ. கண்ணன், துப்பாக்கியால் ரவியை சுட்டுத் தள்ளினார். இதில்குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்து செத்தான் ரவி.
ரவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குக்கொண்டு வரப்பட்டது. காயமடைந்த கண்ணன், சண்முகவேல் ஆகியோரும்மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தை மத்திய சரக ஐஜி ஜாபர் சேட் உள்ளிட்ட உயர் அதிகாரிகள்நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications