சென்னைக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும்: சிபிஎம்
சென்னை:சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும்வலியுறுத்தியுள்ளது.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,தாங்கள் விரும்பிய வார்டுகளை திமுக கொடுக்காததாலும், பேச்சுவார்த்தைக்கே அழைக்காததாலும்கோபமடைந்து சென்னையில் தனித்துப் போட்டியிட்டது.
8 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. எட்டிலும் அக்கட்சி தோல்வி அடைந்துள்ளது. தேர்தல்நாளன்று நடந்த வன்முறை, தங்களது வேட்பாளர்கள் மீது நடந்த தாக்குதல், சரமாரியாக போடப்பட்ட கள்ளஓட்டுக்கள் ஆகியவற்றைப் பார்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொந்தளித்தது.
அக்கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன், தேர்தல் வன்முறையைக் கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார்,பேட்டியும் கொடுத்தார். சென்னைக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து கூட்டணியில் விரிசல் விழுந்து விடும் போலத் தோன்றியதால், வரதராஜனை வரவழைத்து முதல்வர்கருணாநிதி பேசினார். இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்பெறப்பட்டன. ஆனாலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கருணாநிதி நிராகரித்து விட்டார்.
ஆனால் சென்னை மாநகராட்சிக்கு முழுமையாக மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி வருகிறது. இதுகுறித்து வட சென்னை மாவட்ட செயலாளர் டி.கே.சண்முகம்கூறுகையில், தேர்தல் நாளன்று 155 வார்டுகளிலும் திமுகவினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.
வன்முறை, கள்ள ஓட்டு மூலமாகத்தான் இந்த பெரும் வெற்றியை திமுக பெற்றுள்ளது. திமுகவுக்குகிடைத்திருக்கும் வெற்றி, மக்கள் தந்த வெற்றி அல்ல. இது திட்டமிட்டு, முறைகேடாகப் பெறப்பட்ட வெற்றி.
திமுகவுக்கு ஆதரவாக பெரும் அலை வீசியிருந்தால் கூட இந்த அளவுக்கு வெற்றி கிடைத்திருக்காது. கடந்த1996ம் ஆண்டு திமுக, தமாகாவுக்கு ஆதரவாக பெரும் அலை வீசியது. அப்போது கூட சென்னை மாநகராட்சித்தேர்தலில் திமுகவுக்கு பெரிய வெற்றி கிடைத்து விடவில்லை.
அதேபோலத்தான் 2001ல் நடந்த தேர்தலில் கூட அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக, இப்படி ஒருவெற்றியைப் பெறவில்லை. ஆனால் இப்போது திமுக அத்தனை இடங்களிலும் வெற்றி என்பது கற்பனையில்நினைத்துப் பார்க்க முடியாததாக உள்ளது.
சில இடங்களில் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர்கள் வெறும் 300 ஓட்டுக்களைத்தான்பெற்றுள்ளனர் என்பது நம்பக் கூடியதாக இல்லை. எங்களது வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினர் சரமாரியாககள்ள ஓட்டுப் போட்டனர். எங்களது வெற்றியை அவர்கள் பறித்துச் சென்று விட்டனர்.
சென்னை அரசியலில் கிரிமினல்கள் புகத் தொடங்கி விட்டனர். இதன் ஆரம்பமே இந்த தேர்தல் வன்முறை. இந்தரவுடிகளை, கிரிமினல்களை மக்களே துரத்தி அடித்திருக்கலாம். ஆனால் மக்கள் அன்று அப்படிச் செய்யவில்லை.காரணம் பயம். எனவே மக்களைத் திரட்டி இதுபோன்ற மோசடி அரசியலுக்கு முடிவு கட்டத் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வளவு மோசமான ரெளடிகளையும், கிரிமினல்களையும் கட்டுப்படுத்த முடியாத காவல்துறை, எதிர்காலத்தில்எப்படி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கப் போகிறது என்று எங்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது.
மாநகராட்சி கூட்டம் நடைபெறும் தினங்களில், ரிப்பன் கட்டட வளாகத்தில் எங்களது கட்சியினர் கூடி, மாதிரிக்கூட்டத்தை நடத்துவோம். மக்களையும் இக்கூட்டத்திற்கு வரவழைத்து கலந்து கொள்ளச் செய்வோம்.
இந்தத் தேர்தல் வெற்றி நிரந்தரமானதல்ல. உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் வரும்தீர்ப்பின் அடிப்படையில்தான் வெற்றி செல்லுமா, செல்லாதா என்பது தெரிய வரும். தேர்தல் நாளன்று நடந்தவன்முறைச் சம்பவங்கள் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்.
தேர்தல் வன்முறைக்குக் காரணமானவர்களை கைது செய்யக் கோரி 26ம் தேதி மாநில செயலாளர் வரதராஜன்தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றார் சண்முகம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications