ஜெ ஸ்டைல்: 4ல் 2 சஸ்பெண்ட், 2 ராஜினாமா
சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நான்கே பேரில் 2 பேரைஅதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
மிச்சமுள்ள 2 பேரும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
கடந்த மாநகராட்சியில் 61 உறுப்பினர்களைக் கொண்டிருந்த அதிமுகவுக்கு இம்முறை நான்கே இடங்களில்மட்டுமே வெற்றி கிடைத்தது.
மொத்தம் 155 இடங்களைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் 1வது வார்டில் புவனேஸ்வரி, 26வசு வார்டில்சுபாஷ்சந்திர போஸ், 61வது வார்டில் சுந்தரமூர்த்தி 71வது வார்டில் கிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் மட்டுமேஅதிமுக சார்பில் வென்றனர். மற்ற அனைவருமே தோற்றுவிட்டனர்.
இந் நிலையில் வெற்றி பெற்ற 4 கவுன்சிலர்களையும் தலைமைக் கழகத்துக்கு வரச் சொன்னது அதிமுக தலைமை.ஆனால், சுபாஷ்சந்திர போஸ் தவிர மற்ற 3 பேர் மட்டுமே நேற்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.அவர்களிடம் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், அதை ஏற்க புவனேஸ்வரி மட்டும் மறுத்துள்ளார். மற்ற இருவரும் ராஜினாமாவுக்கு சம்மதித்துவிட்டனர்.
இதையடுத்து புவனேஸ்வரிக்கு திட்டு விழவே அழுது கொண்டே அங்கிருந்து கிளம்பிச் சென்றார். ராஜினாமாசெய்யச் சொல்லவே கூப்பிடுகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டதால் போஸ் எஸ்கேப்ஆகிவிட்டார்.
இந் நிலையில் சுபாஷ்சந்திர போஸையும் புவனேஸ்வரியையும் அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஜெயலலிதாஇன்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கழகத்தின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாக வகையில் செயல்பட்டு, கழகத்தின்கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தி, கட்டுப்பாட்டை மீறி, கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் ஏற்படுத்தியகவுன்சிலர்கள் புவனேஸ்வரி, சுபாஷ்சந்திர போஸ் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை பொறுப்புஉள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புக்கள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
இந் நிலையில் 61வது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரமூர்த்தி, 71வதுவார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணன் ஆகிய இருவரும் அதிமுகதலைமையின் உத்தரவுப்படி தங்களது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவித்துள்ளனர்.
திமுகவினர் வன்முறை மூலம் பெற்ற வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவைஎடுத்துள்ளதாக இருவரும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications