மலை மலையாய் குவியும் வெற்றிகள்- கருணாநிதி
சென்னை:உள்ளாட்சித் தேர்தல் வெற்றி தொடர்பாக முதல்வர் கருணாநிதி மக்கள் தொண்டேமகேசன் தொண்டு என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கவிதை:
வெற்றியெட்டுத் திக்குமெட்டக் குவிக்கின்ற தம்பி;
வெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபடுவர் உழவர்;
பட்ட கடன் பல கோடி முழுவதையும் தீர்த்து
பசி தீர்க்கும் உணவுக்கும் அரிசி விலை அக்கணமே குறைத்து-
வாரம் இரு முட்டை சிறாருக்கு எனும் திட்டத்தை அளித்து;
யாரும் எதிர்பாராத பற்பல சாதனைகள் படைத்து
வாழும் குடில்களிலும் வண்ணத் தொலைக்காட்சி அமைத்து;
கையலகத் தரிசு நிலமெனினும்
கண்டிப்பாய் ஏழை விவசாயிக்கே அளித்து;
காணி நிலம் வேண்டும் என்ற பாரதியின் கனவையும் பலிக்க வைத்து
களிப்பிலாடும் மயிலாய் கானம் பாடும்
குயிலாய் மகிழ்ந்திட
கல்விக் கூட பிள்ளைகட்குக் கட்டணச் சுமையை இறக்கி;
மூதாட்டி பெயரால் இருந்த முத்தான திருமணத் திட்டம்
ஆகாட்டியென்ன திருமணமென்று அன்றைய ஆட்சியாளர் ரத்து செய்ய;
பரிவுடனே ஏழைப் பெண் மண விழாவுக்கு பதினைந்தாயிரம் ஈந்து
படித்து விட்டு வேலையின்றி அலைகின்ற இளைஞர்கட்கு
பணி கிடைக்கும் வரையில் திங்கள்தோறும் பண உதவி புரிந்து
கருவுற்ற பாவையர்க்கு கருணைத் தொகை ஆறாயிரம்;
கலந்தாய்வு முறையினிலே இட மாற்றம் ஆசிரியருக்கு
முதியோர் உதவித் தொகை மேலும் அதிகரிப்பு;
முதல் கட்டமாக மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு;
உடனடியாக புதுப்பித்து உழவர், நுகர்வோரை வாழ்வித்து;
ஊதியம், உழைப்போருக்கு உயர்த்தி, ஊக்கப்படுத்தி
போதிய பயன்களனைத்தும் மழையெனப் பொழிந்ததாலே- இந்த
ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கின்றோம் என்பது போன்றே
சாட்சிக்கு மக்களும் மழையாக பொழிந்துள்ளார் வெற்றிகளை..
ஆண்டுகொண்டிருந்தால் மட்டும் போதுமென்று கருதாமல்
யாண்டும் நமது பணி நாட்டாட்சியில் மட்டுமின்றி,
காடு மேடு கடந்து- பட்டி தொட்டி எங்கணும்
மக்கள் தொண்டே
மகேசன் தொண்டு எனத்
தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தால்-
மகத்தான வெற்றிகள் , மாபெரும் வெற்றிகள் எல்லாம்
மலை மலையாய் குவியும் நம் முன்னே
அலை அலையாய் அணிவகுப்பர் மக்கள் நம் பின்னே..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications