சென்னை: கணவரை சுட்டு கொன்ற மனைவி
கொத்தவால்சாவடி பெருமாள் முதலி தெருவில் வசிப்பவர் மாணிக்சந்த் (வயது 40).இவரது மனைவி பிரமீளா தேவி. இவர்களுக்கு அனி என்ற மகளும், சாகர் என்றமகனும் உள்ளனர். பிளாஸ்டிக் மூலப் பொருட்களை வினியோகிக்கும் தொழிலைமேற்கொண்டுள்ளார் மாணிக்சந்த்.
பெருமாள் முதலி தெருவில் இவருக்குச் சொந்தமான 3 மாடி வீடு உள்ளது. இங்குமாணிக் சந்த் குடும்பத்தினர் மற்றும் அவரது தாயார் கமலா தேவி, அண்ணன்சந்திரபால், தம்பி தாராசந்த் ஆகியோரும் வசித்து வருகின்றனர்.
கீழ் தளத்தில் பிளாஸ்டிக் நிறுவனமும், முதல் மாடியில் 3 வாடகை வீடுகளும் உள்ளன.2வது மாடியில், மாணிக்சந்த், கமலா தேவி, தாராசந்த் ஆகியோர் வசித்துவருகின்றனர். 3வது மாடியில் சந்திரபால் தனது குடும் பத்தினருடன் வசித்துவருகிறார்.
மாணிக்சந்த் சம்பாத்தியத்தில்தான் இவர்கள் அனைவரூம் கூட்டுக் குடும்பமாக வசித்துவருகின்றனர்.
ஆனால் தினமும் குடிக்கும் பழக்கம் உடையவர் மாணிக்சந்த். அத்தோடுஅப்பகுதியில் அடிக்கடி பல்வேறு பிரச்சினைகளிலும் சிக்கிக் கொள்வார் என்றும்கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட விநாயகர் சதுர்த்தி விழாவின்போது அப்பகுதி விநாயகர் கோவிலில்பெரும் ரகளையில் ஈடுபட்டாராம் மாணிக் சந்த்.
குடித்துவிட்டு மனைவியோடு சண்டை போடும் வழக்கம் கொண்ட மாணிக்சந்த்,சனிக்கிழமை இரவும் குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதையடுத்து அவருக்கும், பிரமீளா தேவிக்கும் இடையே கடும் வாக்குவாதம்மூண்டது.
விடிய விடிய இருவரும் சண்டை போட்டுள்ளனர். இந் நிலையில் காலை 8மணியளவில் மாணிக்சந்த்தின் படுக்கை அறையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அவர்பெரும் சப்தத்துடன் அலறியுள்ளார்.
இதைக் கேட்டதும் பதறி அடித்து தனது அறையிலிருந்து ஓடி வந்த தாராசந்த்,அண்ணனின் அறைக்கு ஓடினார்.
அங்கு மாணிக்சந்த் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஆனால் அப்போது அங்கு சற்றும்பதற்றம் இல்லாமல் நின்றிருந்தார் பிரமீளா தேவி.
இதையடுத்து தாராசந்த் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்துவந்து விசாரணை நடத்தினர். சுய நினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தமாணிக்சந்த்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரது படுக்கை அறையிலிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 4குண்டுகள் இல்லை.
பிரமீளா தேவியிடம் முதலில் போலீஸார் விசாரித்தபோது கணவரின் தம்பிதாராசந்த்தான் மாணிக்சந்த்தை சுட்டதாக தெரிவித்தார். இதையடுத்து தாராசந்த்திடம்விசாரித்தபோது அண்ணி பிரமீளாதான் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தார்.இதனால் போலீஸாருக்கு குழப்பம் ஏற்பட்டது.
வீட்டு வேலைக்காரப் பெண் அன்னபூரணியிடம் விசாரித்தபோது, பிரமீளாதேவிதான்சுட்டதாக தெரிவித்தார். இதனால் பிரமீளா தேவிதான் சுட்டிருக்க வேண்டும் என்றசந்தேகம் போலீஸாருக்கு வலுத்தது. அதை உறுதிப்படுத்தியது பிரமீளாதேவியின் 6வயது மகள் அனிதான்.
தனது தந்தைக்கும், தாயாருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும் என தெரிவித்தஅனி, சம்பவத்தன்றும் கூட கடும் சண்டை நடந்ததாகவும், ஆத்திரத்தில் தனது தாயார்துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்தார்.
இதை யாரிடமும் சொல்லக் கூடாது என தனது தாயார் மிரட்டி வைத்திருந்ததாகவும்அனி கூறவே, போலீஸார் சந்தேகம் நீங்கி பிரமிளாதேவியை துருவித் துருவிவிசாரித்தனர்.
பெண் போலீஸார் நடத்திய விசாரணையில் தனது குற்றத்தை பிரமீளா தேவி ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீஸார் பிரமீளாதேவியை கைது செய்தனர்.
இந் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணிக்சந்த் சிகிச்சைபலனின்றி இன்று இறந்தார்.
மாணிக்சந்துக்கு தனது மனைவியின் நடத்தை குறித்து சந்தேகம் இருந்து வந்துள்ளது.அடிக்கடி சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு பிரமீளா போனதால் நடத்தையில்சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இதுகுறித்து தனது அண்ணனிடம்அடிக்கடி அழுது புலம்பியுள்ளார் பிரமீளா தேவி.
எனவே பிரமீளா தேவியின் அண்ணன்தான் துப்பாக்கியைக் கொடுத்து சுடச்சொல்லியிருக்கிறார்.
பிரமீளா தேவி சுட்ட துப்பாக்கி சீன வகை துப்பாக்கி ஆகும். 6 ரவுண்டு வரை இதில்சுடலாம். ரூ. 35,000 விலை மதிக்கத்தக்க இந்த துப்பாக்கியை கள்ள மார்க்கெட்டில்வாங்கியிருக்கலாம் என போலீஸார் கருதுகிறார்கள்.
இந்த துப்பாக்கிக்கு லைசென்ஸ் இல்லை. கடந்த 15 நாட்களுக்கு முன்புதான்ராஜஸ்தானிலிருந்து பிரமீளா தேவி இந்த துப்பாக்கியை கொண்டு வந்துள்ளார்.
மனைவியே, கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் கொத்தவால்சாவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரமீளா தேவி வாக்குமூலம்:
கணவரை சுட்டுக் கொன்ற பிரமீளா தேவி போலீஸில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம்:
நானும் எனது கணவரும் ஆரம்பத்தில் சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்தி வந்தோம்.
எனது கணவர் நிறைய சம்பாதிப்பார். ஆனாலும் தினசரி குடித்து விட்டு வருவதால், எனக்கு நிம்மதியே இல்லாமல் போய் விட்டது. கடந்த சில நாட்களாகதினமும் குடித்து விட்டு நள்ளிரவில்தான் வீட்டுக்கே வந்தார். போதையில் என்னிடம் தகராறு செய்வார்.
அவர் குடிபோதையில் வரும்போது சில நேரங்களில் குழந்தைகள் விழித்திருப்பார்கள். ஆனால் அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் என்னை செக்ஸ்உறவுக்கு அழைப்பார். குழந்தைகள் முன்னால் என்னைப் பிடித்து இழுப்பது, தூக்குவது என்று அநாகரீகமாக நடந்து கொள்வார்.
இதை நான் எத்தனையோ முறை கண்டித்தும் அவர் கேட்டபாடில்லை. அவர்கள் மன நிலை பாதிக்கும்படி நடந்து கொண்டார். டிவியை அதிக சத்தத்தில்வைத்துவிட்டு என்னை சினிமா பாடலுக்கு ஆடச் சொல்லி கட்டாயப்படுத்துவார்.
அவரது செக்ஸ் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்தது. ராஜஸ்தானில் உள்ள எனது உறவினர்களைப் பார்க்கப் போனால் அங்கே யாருடனாவது தொடர்புவைத்திருக்கிறாயா என்று கேட்டு தொல்லை செய்தார். காய்கறி வாங்க போனால் கூட சந்தேகப்பட்டு அடித்து உதைப்பார்.
இதுகுறித்து ராஜஸ்தானில் உள்ள எனது அண்ணனிடம் கூறி அழுதேன். அப்போது அவர் ஒரு துப்பாக்கியைக் கொடுத்தார். இனிமேல் உன்னை உனது கணவர்தொந்தரவு செய்து, துன்புறுத்தினால், சுட்டு விடுவேன் என கூறி மிரட்டுமாறு அவர் தெரிவித்தார்.
தீபாவளியன்றும் எனது கணவர் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வந்து தகராறு செய்தார். காலை வரை சண்டை நீடித்தது. அப்போது எனக்கு ஆத்திரம்வந்து, அண்ணன் கொடுத்த துப்பாக்கியால், கணவரை மிரட்டினேன்.
ஆனாலும் அவர் பயப்படவில்லை. இதனால் தான் என்னையும் அறியாமல் சுட்டு விட்டேன். 4 முறை சுட்டேன். இதில் அவரது கழுத்து, மார்பு ஆகியபகுதிகளில் குண்டு பாய்ந்து விழுந்தார். எனது குழந்தைகளும் அதை நேரில் பார்த்தனர் என்று கூறியுள்ளார் பிரமீளா தேவி.
துப்பாக்கி தந்து அனுப்பிய பிரமீளா தேவியின் அண்ணன் அவரது சொந்த ஊரில்பெரிய தாதாவாம். அவர் சொல்லித்தான் பிரமீளா தேவி இந்த கொலையைசெய்துள்ளார் என்பதால் அவரையும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications