விஜயகாந்த் ரசிகர்கள் ரகளை: போலீஸ் தடியடி
கடலூர்:கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், விஜயகாந்த் நடித்த தர்மபுரி படத்தைக் காண வந்தவிஜயகாந்த் ரசிகர்கள், பாடல் காட்சி ஒன்றை மறுபடியும் போடக் கூறி ரகளையில்ஈடுபட்டதால் போலீஸார் தியேட்டருக்குள் புகுந்து தடியடி நடத்தினர்.
தீபாவளியையொட்டி விஜயகாந்த் நடித்த தர்மபுரி படம் ரிலீஸாகியுள்ளது. கடலூர்மாவட்டம் பண்ருட்டியிலும் இப்படம் திரையிடப்பட்டது.
முதல் நாள் படக் காட்சியின்போது பெருமளவில் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.பெரிய கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. பேனர்களும் அமர்க்களமாககட்டப்பட்டிருந்தன.
முதல் காட்சியின்போது ரசிர்கள் விஜயகாந்த்தை வாழ்த்திக் கோஷமிட்டபடியும்,விசலிடித்தபடியும் உற்சாகமாக படத்தைப் பார்த்தனர். ஒரு பாடல் காட்சியின்போதுஅந்தப் பாடலை திரும்பப் போடுமாறு கூறி ஆபரேட்டரை வலியுறுத்தினர்.
ஆனால் அடுத்த காட்சிக்கு தாமதமாகி விடும் என்று கூறி பாடலை திரும்ப ஒளிபரப்பதியேட்டர் நிர்வாகம் மறுத்தது.
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் வன்முறையில் இறங்கினர். தியேட்டரின்இருக்கைகளை அடித்து நொறுக்கினர். ஆபரேட்டர் அறைக்குள் புகுந்து அவரையும்அடிக்க முயன்றனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டிஅடித்தனர். அடிபட்ட ரசிகர்கள் கும்பகோணம்-சென்னை நெடுஞ்சாலையில் அமர்ந்துசாலை மறியல் நடத்தினர். அங்கும் விரைந்து வந்த போலீஸார் அவர்களை மீண்டும்தடியடி நடத்திக் கலைத்தனர்.
பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தியேட்டரில் சேதத்தைவிளைவித்தவர்களை தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications