இலங்கை: ரணில் கட்சியுடன் ராஜபக்ஷே ஒப்பந்தம்
கொழும்பு:இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஆளுங்கட்சியான இலங்கை சுதந்திராகட்சிக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இலங்கை இனப் பிரச்சினை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகளுடன் ஒருங்கிணைந்துசெயல்பட இலங்கை அரசு முடிவு செய்தது. இதையடுத்து முக்கிய எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
இதன் முடிவில், ரணிலும், அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும் சமீபத்தில் சந்தித்துப் பேசினர். இந்த நிலையில் நேற்றுமீண்டும் இரு தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் இறுதியில் ஒப்பந்தம் ஒன்றுகையெழுத்தானது.
இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட முக்கியமான ஐந்து பிரச்சினைகளில் இருகட்சிகளும் இணைந்து செயல்படுவது என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் ராஜபக்ஷே செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு கட்சிகளுக்கும்இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல பெரும்உதவியாக இருக்கும்.
தமிழர்களுக்கு அரசியல் ரீதியிலான தீர்வை வழங்க இரு கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டியதுஅவசியமாகும். இனப் பிரச்சினை தொடர்பான எந்த அரசியல் தீர்வை நாடாளுமன்றத்தில் வைத்தாலும் அதைநிறைவேற்ற மூன்றில் 2 மடங்கு பெரும்பான்மை தேவை. தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் அந்த பலம்கிடைத்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்புடன் அமைதி ஒப்பந்தம் குறித்துப் பேச இந்த ஒப்பந்தம் உதவி செய்கிறது. முன்பைவிட தற்போது அமைதித் தீர்வை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறோம், மிகவும் அருகே வந்துவிட்டோம் என்றார் ராஜபக்ஷே.
இந்த ஒப்பந்தம் குறித்து ரணில் கூறுகையில், இந்த ஒப்பந்தம் இலங்கை மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் கலாச்சாரமாகும் இது .
இது யாருக்கும், எந்த இனத்திற்கும், எந்த அரசியல் கட்சிக்கும் விரோதமான ஒப்பந்தம அல்ல என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications