பெரியாறு: தமிழக முடிவுக்கு கேரளா வரவேற்பு
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதற்கு கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமசந்திரன்வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்மத்திய அரசின் முன்னிலையில், கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, அதில் பலன் கிடைக்காவிட்டால்உச்சநீதிமன்றத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவுக்கு கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னையில் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவாகியுள்ளது.
இந்த முடிவை கேரள அரசு வரவேற்கிறது. தமிழக முதல்வர் கருணாநிதி நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவர்,சிறந்த அனுபவசாலி. அதேபோல கேரள முதல்வர் அச்சுதானந்தனும் அனுபவம் நிறைந்த தலைவர். எனவேஎல்லாப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்று ஒருபோதும் கேரளா கூறியதில்லை. பேச்சுவார்த்தையை தொடங்கசாதகமான சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டுத்தான், நல்லெண்ண அடிப்படையில் நெய்யாற்றிலிருந்து கேரளஅரசு தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடிவு செய்தது என்றார் பிரேமச்சந்திரன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications