நடு ரோட்டில் ரெளடி ஓட ஓட விரட்டிக் கொலை
சென்னை:சென்னை நகரின் முக்கியப் பகுதியான கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் ஓட ஓட விரட்டி ரெளடி வெட்டிக் கொலைசெய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பு மிகவும் முக்கியமான போக்குவரத்துப் பகுதியாகும். எப்போதும்போக்குவரத்து நிரம்பி வழியும் இப்பகுதியில் நேற்று மாலை பரபரப்பான கொலை ஒன்று நடந்தது.
அசோக் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்ட்ே தொழிலில் ஈடுபட்டுள்ள உதயா என்பவரும், அவரது நண்பர் சுல்தான்என்பவரும் மோட்டார் சைக்கிளில் கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.
அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த ஒரு கும்பல் இருவரையும் துரத்தியது. மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு உதயாவும், சுல்தானும் ஓடியுள்ளனர். ஆனால் அவர்களை விரட்டிய அக்கும்பல் இருவரையும் சரமாரியாகவெட்டித் தள்ளியது.
பொதுமக்கள் நிறைந்திருந்த அந்த இடத்தில் இருவர் ஓட ஓட வெட்டப்பட்ட சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள்அலறி அடித்து ஓடினர். இருவரையும் வெட்டித் தள்ளிய கும்பல் அங்கிருந்து கார் ஒன்றில் ஏறித் தப்பியது.
படுகாயமடைந்த உதயாவை போலீஸார் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சுல்தான் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதில் உதயா சிகிச்சை பலனின்றிஇறந்தார். சுல்தான் சீரியஸாக உள்ளார்.
உதயாவும், சுல்தானும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் கூட ரெளடிக் கும்பல் ஒன்றைச்சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு எதிர் கோஷ்டியினர்தான் இங்கு வரவழைத்து இருவரையும்வெட்டித் தள்ளியதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி ஒருவரைக் கொலை செய்த சம்பவம் சென்னை நகரமக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications