நியூயார்க்: பஸ் நிலையத்தில் வெடிகுண்டு புரளி
நியூயார்க்:அமெரிக்காவின் நியூயார்க் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டுடன் ஒருவர் நுழைந்திருப்பதாக வந்ததகவலையடுத்து பேருந்து நிலையம் மூடப்பட்டது. இதனால் நியூயார்க்கில் பரபரப்பு நிலவியது.
நியூயார்க்கில் உள்ள பேருந்து நிலையம் எப்போதும் கூட்ட நெரிசல் மிக்க ஒன்று. இங்கு தினசரி 2 லட்சம்பயணிகள் வந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் (இந்தியநேரப்படி இரவு 10 மணி) பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்து ஒன்றில் வெடிகுண்டுடன் ஒருவர் ஏறியிருப்பதாக வந்த தகவலால் ஏற்பட்ட பரபரப்பே இது. இந்தத்தகவலைத் தொடர்ந்து பேருந்து நிலையம் மூடப்பட்டது. பயணிகள் அனைவரும் பேருந்து நிலையத்தை விட்டுவெளியேற்றப்பட்டனர்.சம்பந்தப்பட்ட பேருந்தை தகுந்த முன்னேற்பாடுகளுடன் காவல்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டனர். அந்தப்பேருந்தில் ஒரே ஒரு நபர் மட்டும்தான் இருந்தார். வேறு யாரும் இல்லை.
28 வயது மதிக்கத்தக்க அந்த நபரை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்து வெளியே கொண்டு வந்தனர்.அவரிடம் சோதனை போட்டதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மாறாக அந்த நபர் மன உளைச்சலால்பாதிக்கப்பட்டவர் போலத் தெரிந்தார்.அந்த நபர் இருந்த பேருந்து பென்சில்வேனியாவிலிருந்து நியூயார்க் வந்த பேருந்து.
விஸ்கான்சினில் அந்த நபர் ஏறியுள்ளார். ஆனால் பேருந்து நிலையத்தில் அவர் இறங்கவில்லை. மாறாகஉளறியபடி இருந்துள்ளார். இதையடுத்து அந்த நபர் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என தகவல் பரவவேபரபரப்பாகி விட்டது.
அந்த நபரை போலீஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர் வெடிகுண்டு வைக்க வந்தவர்போலத் தெரியவில்லை என்று பேருந்து நிலைய செய்தித் தொடர்பாளர் மார்க் லவோர்க்னா கூறினார்.
இந்த சம்பவம் காரணமாக பேருந்து நிலையத்தின் தென் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சுமார் 4 மணிநேர மூடலுக்குப் பின்னர் மாலை 4.30 மணிக்கு பேருந்து நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.
நியூயார்க் துறைமுக பொறுப்புக் கழகம்தான் இந்த பேருந்து நிலையத்தை நிர்வகித்து வருகிறது. இதேநிர்வாகத்தின் கீழ் தான் நியூயார்க்-நியூ ஜெர்சியில் உள்ள விமான நிலையங்கள், பாலங்கள், சுரங்கப் பாதைகள்,போக்குவரத்து நிர்வாகங்கள் உள்ளன.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான உலக வர்த்தக மையம் உள்ள இடத்தையும் இதே நிர்வாகம் தான்கட்டுப்பாட்டில் உள்ளது. துறைமுக பொறுப்புக் கழகத்தின் கீழ் உள்ள அனைத்து இடங்களும் தீவிரவாதத்தாக்குதலுக்கு மிகவும் சாதகமான இடங்களாக பாதுகாப்பு நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளதுநினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications