பிரணாபுக்கு வெளியுறவு-அந்தோணிக்கு பாதுகாப்பு
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் புதிதாக 3 அமைச்சர்கள்சேர்க்கப்பட்டுள்ளனர். வெளியுறவு அமைச்சராக பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று இரவு விரிவுபடுத்தப்பட்டது. கேபினட்அமைச்சராக ஏ.கே.அந்தோணியும், இணை அமைச்சர்களாக ஜெய் பிரகாஷ் நாராயணன் யாதவ், கர்நாடகத்தைச்சேர்ந்த நடிகர் அம்பரீஷ் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
அந்தோணிக்கு பாதுகாப்புத் துறை வழங்கப்பட்டது. ஜெய் பிரகாஷ் நாராயணன் யாதவுக்கு நீர்ப்பாசனத் துறைஇணையமைச்சர் பதவியும், அம்பரீஷுக்கு தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் பதவியும்ஒதுக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த பதவியேற்பு ஜனாதிபதி அப்துல் கலாம்,புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சர்களில் யாதவ் மட்டும் லாலுவின்ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் ஆவர்.
இதுதவிர சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன. பாதுகாப்புத் துறை அமைச்சர்பிரணாப்முகர்ஜி, வெளியுறவுத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 1995-96ல் நரசிம்மராவ்அமைச்சரவையில் பிரணாப் வெளியுறவு அமைச்சராக இருந்துள்ளார்.
இதுவரை இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த ஆஸ்கர் பெர்னாண்டஸுக்கு தொழிலாளர் மற்றும்வேலை வாய்ப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது.
சந்திரசேகர் சாஹுவுக்கு, ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்துராஜ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மணிசங்கர அய்யருக்கு கூடுதலாக வட கிழக்குமாகாண வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications