கூட்டணி கட்சிகளுக்கு திமுக தாராளம் ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னைநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளைகூட்டணிக் கட்சிகளுக்கு திமுக தாராளமாக ஒதுக்கி வருகிறது. இதன் பின்னணியில்பலே திட்டம் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிரடியான வெற்றியைப்பெற்றுள்ளது. அனைத்து மாநகராட்சிகள், 100க்கும் மேற்பட்ட நகராட்சிகள், 3ம் நிலைநிகராட்சிகள், 90 சதவீத பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றில் திமுககூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு படு தாராளமாகபதவிகள் தரப்பட்டுள்ளன. அதாவது கூட்டணிக் கட்சிக்கு ஒரு பிரதிநிதி கூட இல்லாதநகராட்சியிலும், பிற உள்ளாட்சிகளிலும் கூட தலைவர் பதவி தரப்பட்டுள்ளது.

குறிப்பாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சிக்குஒரு கவுன்சிலர் கூட இல்லை. ஆனால் அங்கு தலைவர் பதவி காங்கிரஸுக்குத்தரப்பட்டுள்ளது.

அதேபோல மதுரையில் செல்வாக்கே இல்லாத பாமகவுக்கு, மதுரை அருகே உள்ளஅவனியாபுரம் நகராட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

திமுக தலைமையின் இந்த போக்கு அக்கட்சியினருக்கு மட்டுமன்றி கூட்டணிக்கட்சியினருக்கும் கூட படு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கெல்லாம்பலே பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது.

50 சதவீத மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுகவழங்கியுள்ளது. அதேபோல 40 சதவீத நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர்,ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியிடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுகஒதுக்கியுள்ளது.

தலைமையின் இந்தப் போக்கால் திமுகவினர் கடுப்பாகியுள்ளனர். பெரும்பான்மைபலம் உள்ள இடங்களைக் கூட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது எந்த வகையிலநியாயம் என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் தலைமைக்குகோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் கட்சியினரை சமரசப்படுத்தும் வேலையைமாவட்ட தலைமைக்கு மேலிடம் கொடுத்துள்ளது.

2008ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இந்ததாராளமயமாக்கல் கொள்கையை திமுக அமல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.கூட்டணியாக தேர்தலை சந்தித்தால் மட்டுமே லாபம், அதிகாரத்தைப் பிடிக்க முடியும்என்பதை முன்பை விட இப்போது திமுக ரொம்ப நன்றாகவே புரிந்து வைத்துக்கொண்டுள்ளது.

எனவே தற்போது உள்ள கூட்டணியில் கொஞ்சம் கூட பிளவு வந்து விடாமல்அப்படியே சிந்தாமல், சிதறாமல் நாடாளுமன்றத் தேர்தல் வரை கொண்டு செல்லதிமுக முடிவு செய்துள்ளது.

எனவேதான் உள்ளாட்சி அமைப்புகளில் அதிக அளவிலான பதவிகளை கூட்டணிக்கட்சிகளுக்கு திமுக விட்டுக் கொடுத்துள்ளது. அதேசமயம், கூட்டணிக் கட்சிகளால்சுயமாக எதையும் செய்து விட முடியாதபடி அவர்களது பலம் சற்றும் இல்லாதஇடமாகப் பார்த்து கொடுத்து ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளது திமுக.

இப்போது சேந்தமங்கலத்தில் காங்கிரஸுக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லை. ஆனால்தலைவர் பதவி அக்கட்சிக்கு. தலைவராக காங்கிரஸ் இருந்தாலும் கூட திமுகவினர்மற்றும் கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்புடன்தான் அவரால் எதையும் நகர்த்தக்கூட முடியும்.

இப்படி பதவியையும் கொடுத்து விட்டு, அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள்ளும்வைத்துக் கொள்ளும் வகையில் ராஜ தந்திரத்துடன் திமுக தலைமைசெயல்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

கூட்டணிக் கட்சியினர் தலைவர் பதவியில் இருந்தாலும் கூட திமுக கவுன்சிலர்களின்ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்பதால் கூட்டணிக் கட்சியினர்திமுகவினரின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பார்கள். மேலும், கூட்டணிக்கட்சியினருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ள அமைப்புகளில் துணைத் தலைவர்பதவி திமுகவுக்கு கொடுக்கப்படவுள்ளது.

எனவே கூட்டணிக் கட்சியினர் கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டதைப் போன்ற ஒருசூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதேபோல இன்னொரு செக்கையும் ஆட்சியாளர்கள் வைத்துள்ளனர்.

முன்பெல்லாம், மேயர், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், நகராட்சித் தலைவர்,ஊராட்சி ஒன்றியத் தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வந்தால், அதை மூன்று கூட்டங்களுக்கு கொண்டு வந்து,பெரும்பான்மை கவுன்சிலர்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பரிந்துரைத்து அனுப்பமுடியும். அதன் பிறகே ஆட்சித் தலைவர் அவரைடிஸ்மிஸ் செய்வார்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. உள்ளாட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துவிட்டனர். அதாவது ஒரு தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துஉடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரைக்க முடியும். அதை ஏற்றுஆட்சித் தலைவர் அந்த தலைவரை பதவி நீக்கம் செய்த விடலாம். அதாவது யார்மீதாவது நம்பிக்கை இல்லை என்றால் ஒரே அட்டாக்தான்.

எனவே, திமுகவினரை மீறி செயல்பட யாராவது முயன்றால் அந்தத் தலைவரின் பதவிஒரே தீர்மானம் மூலம் ஹோகயாவாகி விடும். இப்படி பல செக்குகளை வைத்துக்கொண்டுதான் கூட்டணிக் கட்சியினருக்கு தலைவர் பதவிகளை திமுக அள்ளிக்கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

இதை கூட்டணிக் கட்சியினரும் உணராமல் இல்லை. திமுக இப்படி செக் வைத்தால்நாம் எப்படி செக் வைக்கலாம் என்று அவர்களும் யோசித்திருக்கக் கூடும். எனவேவருகிற ஐந்து வருடங்களும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளில் அனல்பறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த உள்ளாட்சி அமைப்புகளும் திமுக கூட்டணி வசமே உள்ளதால் எப்படிசெயல்படப் போகிறார்கள் என்பதை மக்களும் பார்க்க காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+