துரோகம் கூடாது- கருணாநிதி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் துளியும் துரோகம்தலை காட்டாமல், பங்கீட்டுக்கு பங்கம் வராமல் கூட்டணிக் கட்சியினர் அனைவரும்நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறே உள்ளாட்சி மன்றத் தேர்தலையும், எந்தசாக்குப் போக்கும் கூறி ஒத்திவைக்காமல், உரிய நேரத்தில் அறிவித்து, அவ்வாறேநடத்தி இன்றைக்கு ஒரு லட்சத்து ப்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள், தங்கள் பதவிப்பொறுப்புக்கான உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள் என்கிறபோது இரட்டிப்புமகிழ்ச்சி பெருகுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கோ, சட்டமன்றத் தேர்தலுக்கோ அமைப்பது போன்ற ஒருகுறிப்பிட்ட எண்ணிக்கை வடிவிலான அமைப்புகளின் தேர்தலுக்கென எளிதாகஅமைக்கக் கூடிய கூட்டணியல்ல.

இது ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட பதவிகளுக்கான தேர்தல்என்கிறபோது என்னதான், அமைப்புரீதியாக வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாடு மிக்ககட்சிகளாக இருந்தாலும், கூட்டணியென்று உருவாகிறபோது, அங்கொன்றும்,இங்கொன்றுமாக சில பிசிறுகள், ஏன், பிணக்குகளே கூட தோழமைக்கிடையேஏற்படுவது தவிர்க்க முடியாதது.

இத்தனை இடையூறுகள், சிரமங்களுக்கிடையிலேயும் கூட்டணி நெறியைக் காப்பதில்திமுகவைப் பொறுத்தவரையில், இடங்களையும், பதவி பொறுப்புகளையும்தோழமைக் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வதில் திறந்த மனத்துடன் தாராளமாகவேஇருக்கிறது என்பதை நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கூட்டணிஅமைத்தபோதே, நடு நிலையாகச் சிந்திக்க்க கூடிய தமிழ் மக்கள் நன்றாகவேஅறிவார்கள்.

இப்போதும் கூட பல சிக்கல்களுக்கிடையே இந்த கூட்டணியிலும் திமுகவைப்பொறுத்தவரையில் திறந்த உள்ளத்துடன்தான் பதவி பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் பணியை நிறைவேற்றியிருக்கிறது எனலாம்.

உதாரணத்திற்கு, சென்னை மாநகரையொட்டி உள்ள திருவொற்றியூர் நகராட்சியில்,தலைவர் பதவி நமது கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தோழர் ஜெயராமனுக்கு வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூரில்மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக 25 வார்டுகளிலும், காங்கிரஸ் 4 வார்டுகளிலும்வென்றுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.

இருந்தாலும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு தலைவர் பதவியை ஒப்படைப்பதாக பகிர்ந்துகொண்டிருப்பது, வேறு சில இடங்களில் விளைந்துள்ள கசப்பு உணர்வைக் கூடமாற்றக் கூடியதாக அமைந்துள்ளது மட்டுமல்ல, இதை நினைத்து அதை மறந்துவிடலாம் என்ற ஆறுதலையும், அளிக்க வல்லதாக உள்ளது.

இந்த திருவொற்றியூர் பங்கீட்டை கூர்ந்து நோக்கி சிந்திக்கும் எந்தவொருஉடன்பிறப்பானாலும், தங்கள் பகுதியில் உள்ளாட்சி அமைப்புப் பதவிகளுக்கானதோழமைக் கட்சிகளின் பங்கீட்டு முறைக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் பாதுகாப்பாகபார்த்துக் கொள்வார்கள்.

எனவே தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்கு இதய சுத்தியோடுபாடுபட வேண்டும். துளியும் துரோகம் தலை காட்டினால், மொத்த முயற்சியும்,உழைப்பும் மூளியாகி விடும் என்பதை ஒர் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு,பதவிப் பொறுப்புகள், அறிவிக்கப்பட்டவாறு அறிவிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்திடமனச்சாட்சிக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+