அமைதிப் பேச்சுவார்த்தை: எதிர்பார்ப்பில் இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜெனீவாவில் வருகிற 28ம் தேதி தொடங்கும்அமைதிப் பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு இலங்கையில் எழுந்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் எதிர்பாராதவிதமாக முடிவுக்கு வந்தது. அன்று இரு தரப்பினரும் கடுமையானசண்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் இந்த சண்டையில் உயிரிழந்துள்ளனர்.பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகளாக வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், நார்வே நாட்டின் மத்தியஸ்த முயற்சியின் விளைவாக இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தனர். இதைத் தொடர்ந்து ஜெனீவாவில் 28 மற்றும் 29 ஆகியஇரு நாட்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த முடிவானது.

இந்தப் பேச்சுவார்த்தையில் சுப.தமிழ்ச் செல்வன் தலைமையிலான விடுதலைப் புலிகள் குழுவும், நிர்மல் டி சில்வாதலைமையிலான இலங்கை அரசுக் குழுவும் பங்கேற்கவுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தை என்ன மாதிரியான முடிவைத் தரும், ஏதாவது உடன்பாடு ஏற்படுமா, மீண்டும்தொடங்கியுள்ள போர் முடிவுக்கு வருமா என்று பலவிதமான எதிர்பார்ப்புகள் இலங்கையில் கிளம்பியுள்ளன.

இப்பேச்சுவார்த்தையில் பெரிதாக எதுவும் நடந்து விடப் போவதில்லை என்பது இலங்கை அரசுத் தரப்பு கருத்தாகஉள்ளது.

பேச்சுவார்த்தை குறித்து இலங்கை அரசின் அமைதிச் செயலக தலைவர் பலித கொஹனோ கூறுகையில், ஜெனீவாபேச்சுவார்த்தை மூலம், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்த முயன்றாலேஅது பெரிய வெற்றியாகும்.

எங்களைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தை தோல்வி அடைவதை நாங்கள் விரும்பவில்லை என்றார் கொஹானா.தேசிய அமைதி கவுன்சில் என்ற தன்னார்வ அமைப்பின் செயல் இயக்குநர், ஜெஹன் பெரைரா கூறுகையில், இந்தபேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் கையெழுத்தாகாது என்றே தெரிகிறது.

தொடர்ந்து பேசுவது என்ற உடன்படிக்கையாவது ஏற்படுமா என்பதே சந்தேகமாக உள்ளது. மிகவும் குழப்பமான,நிலையற்ற சூழலின் பின்ணனியில் அவர்கள் பேசப் போகிறார்கள் என்கிறார்.

இதற்கிடையே, இலங்கை ஆளும் கட்சியான சுதந்திரா கட்சிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான ரணில்விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகஇலங்கையில் கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் அரசுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் மூலம்விடுதலைப் புலிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க முடியாது என்று தமிழர்களிடையே கருத்து நிலவுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்கூறுகையில், தமிழர்களின் நம்பிக்கையைப் பெற இந்த ஒப்பந்தம் உதவாது. இதை விட உறுதியானநடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

தமிழர் பகுதிகளில் விமானம் மூலம் குண்டு வீசித் தாக்குவதை முதலில் இலங்கை அரசு நிறுத்த வேண்டும். மனிதஉரிமைகளை மீறும் செயல்களை நிறுத்த வேண்டும். யாழ்ப்பாணத்திற்கும், நாட்டின் இதர பகுதிகளுக்குமானபோக்குவரத்தை முற்றிலும் திறந்து விட வேண்டும்.

இலங்கையின் தென் பகுதியைச் சேர்ந்த கட்சிகள் அத்தனையும் தமிழர்களை ஏமாற்றி விட்டன. இது கடந்தகாலங்களில் நாங்கள் கண்ணுற்ற அனுபவம். தமிழர்களின் உரிமைகளை அவை மதிக்கவில்லை.

ஜெனீவா பேச்சுவார்த்தையில் நல்லது நடக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஆனால் அதற்கான வாய்ப்புஇருக்கிறதா என்று கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை என்கிறார் ரவிராஜ்.

போர் முனையில், இரு தரப்புமே (இலங்கை அரசு, விடுதலைப் புலிகள்) கடும் சேதத்தை சந்தித்துள்ளசூழ்நிலையில்தான் தற்போது ஜெனீவாவில் நேருக்கு நேர் சந்தித்துப் பேசவுள்ளனர். எனவே பேச்சுவார்த்தையின்சூழல் மிகக் கடுமையானதாகவே இருக்கிறது.

தற்போது ஜெனீவாவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாலோ அல்லது திருப்தி ஏற்படும்வகையிலான முடிவுகள் எட்டப்பட்டாலோ அது நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கும் என்றே பல்வேறுதரப்பினரும் கவலைப்படுகிறார்கள்.

எனவே ஜெனீவா பேச்சுவார்த்தையின் விளைவுகளை அறிய ஒட்டுமொத்த இலங்கையும் பெரும் எதிர்பார்ப்புடன்காத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+