தொடரும் மழை: நீரில் மூழ்கிய குறுவை பயிர்கள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக காவிரிப் பாசனப் பகுதிகளில் குறுவை அறுவடை வெகுவாகபாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ம் தேதி வட கிழக்குப் பருவ மழை பெய்யத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக மழைதீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழைபெய்து வருகிறது. ஏற்கனவே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், தொடர்ந்து ஆறுகளில்தண்ணீர் வந்ததாலும், தற்போது மழையும் சேர்ந்துள்ளதாலும், குறுவைப் பயிர்கள் நீரில் மூழ்கி வருகின்றன.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஹெக்டேர் அளவுக்கு குறுவைப் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பல ஏக்கர்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே முதல் கட்ட அறுவடை முடிந்து விட்டது. இந்தப் பயிர்கள் மட்டும் தப்பிவிட்டன.

ஆனால், தற்போது நடந்து வரும் அறுவடை தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. 20 சதவீத பயிர்கள்நாசமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அடுத்து மேற்கொள்ளப்படவுள்ள தாளடி பயிர் சாகுபடிப்பணிகளும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழை காரணமாக நனைந்த நெல்லில் ஈரப் பதம் அதிகமாக இருப்பதால் நல்ல விலைக்கு விற்பனை செய்யமுடியாமலும் விவசாயிகள் தவிக்கிறார்கள். மொத்தத்தில் இந்த மழையால் கிடைக்கப் போகும் சம்பா சாகுபடியைநினைத்து சந்தோஷப்படுவதா அல்லது குறுவை பயிருக்கு ஏற்பட்ட பாதிப்பை நினைத்து கவலை கொள்வதாஎன்ற குழப்பத்தை விவசாயிகளுக்குக் கொடுத்து விட்டது.

2 நாட்களுக்கு மழை நீடிக்கும்:

இதற்கிடையே மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் பாம்பனில்தான் அதிகபட்சமாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து நாமக்கல்லில் 90 மி.மீ., தாம்பரத்தில் 70 மில்லி மீட்டரும், செங்கல்பட்டில் 80, சோளிங்கரில் 60 மி.மீமழை பெய்துள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்றும் விட்டு விட்டு மழைபெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+