புகுந்த வீட்டில் மண்ணைக் கவ்விய கேப்டன்
சென்னை:தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வாக்குகளையும், கவுன்சிலர் பதவிகளையும்கைப்பற்றியுள்ள விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு அவரது சொந்த தொகுதியான விருத்தாச்சலத்தில் பெரும் அடிகிடைத்துள்ளது.
மாநகராட்சிகளில் 16 கவுன்சிலர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளைக்கைப்பற்றி பெரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது தேமுதிக.
மதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட கூடுதல் இடங்களில் வென்று அக்கட்சிகளுக்கு பெரும் சவாலாகமாறியுள்ளது விஜயகாந்த்தின் கட்சி. இப்படி தமிழகம் முழுதும் வெற்றிக் கொடி நாட்டியுள்ள தேமுதிகவுக்கு,அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தின் சொந்தத் தொகுதியான விருத்தாச்சலத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
விருத்தாச்சலம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில், 2 வார்டுகளில் மட்டுமே தேமுதிக வெற்றிபெற்றுள்ளது.
அதேபோல விருத்தாச்சலம் ஒன்றியத்துக்கான 19 கவுன்சிலர்களில் தேமுதிகவிலிருந்து ஒருவர் கூடஜெயிக்கவில்லை. அந்தத் தொகுதியில் உள்ள கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள 24 வார்டுகளில் 5ல் மட்டுமேதேமுதிகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
கங்கைகொண்டான் பேரூராட்சியில் 2 வார்டிலும், மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 1 வார்டிலும் மட்டுமேதேமுதிக வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் தேமுதிகவுக்கு தோல்வியேகிடைத்தது.
பிறந்த ஊரான மதுரையில் 9 வார்டுகளைக் கைப்பற்றி திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தகேப்டன், புகுந்த வீடான விருத்தாச்சலத்தில் மண்ணைக் கவ்வியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications