சோவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:உள்ளாட்சித் தேர்தல் குறித்து விமர்சித்துள்ளதற்கு துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமிக்குதேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் ஆலோசகர் சிவசாமிநாதன் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,

உள்ளாட்சித் தேர்தல் குறித்து விமர்சனம் செய்வதை சில அரசியல்வாதிகள், பொதுநலவாதிகள் என்று தங்களைப் பிரகடனப்படுத்தி கொண்டிருப்பவர்களும்,தேவையற்ற முறையில் மாநில தேர்தல் ஆணையத்தின் மீது களங்கம் கற்பிக்ககங்கணம் கட்டித் திரிகிறார்கள்.

மாநில தேர்தல் ஆணையம் தனது கடமைகளை, நடுநிலையுடன் நல்ல முறையில்செய்து முடித்துள்ளது. தேர்தல நாளன்று சில விரும்பத்தாகத நிகழ்ச்சிகள்நடந்திருக்கலாம். எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு உடனுக்குடன்நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

இந் நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீது வேண்டும் என்று சட்ட வல்லுனர் சோபோன்றவர்கள் மாசு கற்பிக்க துடிப்பதன் மர்மம் எங்களுக்குப் புரியவில்லை.என்னென்ன செயல்பாடுகளில் தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக உடன்பாடுகொண்டிருந்தது என்று தெளிவாக சொல்லட்டும். சரியான பதில் தர காத்திருக்கிறோம்.

சுதந்திரமாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையம் யாருடைய தூண்டுதலுக்கும்துணை போக வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார் சிவசாமிநாதன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+