இட ஒதுக்கீடு: முதல்வர்களுக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மலை வாழ் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து குறித்து அவரச நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றுகோரி அனைத்து மாநில முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதிகடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசுப் பணிகளில் பதவிஉயர்வின்போது, தாழ்த்தப்பட்டவர்கள், மலை வாழ் பழங்குடியின மக்களிடையே வசதி படைத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு அரசியல் சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிரானதாக உள்ளது. அனைத்து குடிமக்களுக்கும் சமூக,பொருளாதார, அரசியல் ரீதியாக நியாயம் கிடைக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகிறது.
சமூக ரீதியிலும், கல்வியிலும் பின் தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அரசியல்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு வழங்கக் கூடாது என்றுஅரசியல் சட்டத்தில் கூறப்படவில்லை.
பல நூற்றாண்டுகளாக சமூக, கல்வி ரீதியாக பின் தங்கியிருந்தவர்களுக்கு சுதந்திரத்திற்குப் பின்னர் இத்துறைகளில்வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் எழுந்துள்ள சூழ்நிலையை இந்தப் போக்கைஅனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டியது நியாயமான ஒன்றுதான்.
தாழ்த்தப்பட்ட மற்றும் மலை வாழ் பழங்குடியின மக்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க அவசரநடவடிக்கை எடுக்க வேண்டிய, நெருக்கடியான காலகட்டத்தில் நாம் உள்ளோம்.
இதுதொடர்பான வழக்கு வருகிற 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதால், அனைத்துமாநிலங்களும் இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொண்டு தங்களது கருத்தை உச்சநீதிமன்றத்தில்தெரிவிக்க வேண்டும். அதேபோல மத்திய அரசுக்கும் தங்களது ஆலோசனையை வழங்க வேண்டும் என்றுகோரியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications