தேனியில் மதிமுக கவுன்சிலரை கடத்த முயற்சி
தேனி:தேனி ஊராட்சி ஒன்றிய குழு மதிமுக கவுன்சிலரை கடத்த திமுகவினர் முயற்சி செய்தனர். இதைத் தடுக்கஅதிமுக கவுன்சிலர்கள் முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது.
தேனி ஊராட்சி ஒன்றிய குழு வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் அதிமுகவும், திமுகவும் தலா 5 கவுன்சிலர்களைப்பெற்றுள்ளன. மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு வெற்றி கிடைத்தது.
இதனால் யார் ஒன்றியக் குழுத் தலைவர் பதவியைப் பிடிப்பது என்பதில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேகடும் மோதல் நிலவி வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதால் மதிமுககவுன்சிலரை மடக்கி தங்களுக்கு ஆதரவாக திருப்ப திமுகவினர் முடிவு செய்ததாக தெரிகிறது.
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலரை மடக்க அதிமுக தரப்பும் முயற்சி மேற்கொண்டு வந்ததால்பரபரப்பு கூடியது. இந்த நிலையில் நேற்று கவுன்சிலர்கள் அனைவரும் பதவியேற்றனர்.
பதவியேற்புக்குப் பின்னர் மதிமுக கவுன்சிலர் கிருஷ்ணபக்தன் தனது ஊருக்கு செல்ல காரில் ஏறினார். அப்போதுதிமுகவனர் அங்கு கும்பலாக வந்து கிருஷ்ணபக்தனை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்த அதிமுகவினர், திமுகவினருடன் மோதலில் இறங்கினர். இரு தரப்பினரும் பயங்கர அடிதடிமோதலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும்தடியடி நடத்திக் கலைத்தனர். பின்னர் கிருஷ்ணபக்தன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
பின்னர் பலத்த பாதுகாப்புடன் கிருஷ்ணபக்தன் தனது வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். மதிமுக கவுன்சிலரைகடத்த நடந்த முயற்சியால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications